
மதுரை திருமங்கலம்- விருதுநகர் 4 வழிச்சாலையில் விபத்து. ஆறு பேர் பலி என தகவல். மதுரை திருமங்கலம் – விருதுநகர் 4 வழிச்சாலையில் இன்று காலை நடந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பழ வியாபாரி உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சிறுமி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், மூவர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இவ்விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி […]
Continue reading …
வெற்றிலை பாக்கு வைத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த வித்தியாசமான விவசாய சங்க வேட்பாளர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் கோ.கண்ணன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் இன்று கோவில்பட்டி நகர் பகுதியில் பொதுமக்கள், தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு தரப்பினரிடமும் தனது சின்னமான டில்லர் கலப்பைக்கு வாக்கு சேகரித்தார். தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி தலைமையில் வேட்பாளர் கோ.கண்ணன் தனது தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரத்துடன் வெற்றிலை பாக்கு வைத்து விவசாயிக்கு […]
Continue reading …
தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, காவிரி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவேன்.திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரைவைகோ உறுதி. இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரைவைகோ ம.தி.மு.க. சார்பில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுவரும் துரைவைகோ திருச்சி ரெட்டைவாய்க்கால் பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து ராம்ஜிநகர், கே.கள்ளிக்குடி, புங்கனூர், நவலூர்குட்டப்பட்டு, அரியாவூர், சத்திரப்பட்டி பஸ்நிலையம், அம்மா பேட்டை, இனாம்குளத்தூர், கோமங்கலம், ஆலம்பட்டிபுதூர் […]
Continue reading …
ஸ்டாலினுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் விதமாக இந்த தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரர்கள் டெபாசிட் இழப்பார்கள் என்று தேனியில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு. தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சுமார் […]
Continue reading …
திண்டுக்கல் தரகு மண்டி வர்த்தக சங்க வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் வெங்காய பேட்டையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் கை பார்த்தல் (தரம் பிரித்தல்) வேலைக்கு வரவேண்டாம் என்று நிர்வாகிகள் கூறியதால் பெண்கள் ஆர்ப்பாட்டம் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பெண்கள் ஆர்ப்பாட்டம்
Continue reading …
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ₹2 கோடிக்கு ஆடுகள் விற்பனை! தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கடந்த ஆண்டை விட குறைந்த அளவிலேயே ஆடுகள் விற்பனை ஆகியுள்ளன.
Continue reading …
ஓட்டு கேட்டு எந்தக் கட்சியினரும் கிராமத்திற்கு வர வேண்டாம் என்று திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே என்று மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தேர்தலின்போது மக்கள் வேட்பாளர்களிடமும் ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்கும் விஷயம். ஆனால், அது குறைகின்றபோதும், நிவர்த்தி செய்யப்படாதபோதும் மக்கள் ஏமாற்றமடைகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குழிப்பட்டி மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லை என கூறப்படுகிறது. மலைவாழ் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ […]
Continue reading …
கடந்த ஒரு வாரமாக மயிலாடுதுறையில் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வரும் சிறுத்தை பிடிபடாமல் இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட எல்லையான காஞ்சிவாய், பேராவூர் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதாக தகவல் வெளியானது. அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவில் தேவையில்லாமல் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். சிறுத்தையை பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கையை வனத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். சிறுத்தை தென்படுவதாக கூறிய […]
Continue reading …
இன்று தமிழ் காமெடி நடிகை தனது கணவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன் பாஜகவில் இணைந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ஆர்த்தி. இவர் தனுஷின் “படிக்காதவன்” உட்பட பல திரைப்படங்களில் காமெடி நடிகையாக நடித்துள்ளார். நடிகை ஆர்த்தி கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவரது மறைவிற்குப் பின் அதிமுகவிலிருந்து விலகி அரசியலில் இருந்தும் விலகி இருந்தார். தற்போது திடீரென அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் […]
Continue reading …