பாஜகவில் இணைந்த தமிழ் காமெடி நடிகை!

Filed under: அரசியல்,தமிழகம் |

இன்று தமிழ் காமெடி நடிகை தனது கணவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன் பாஜகவில் இணைந்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ஆர்த்தி. இவர் தனுஷின் “படிக்காதவன்” உட்பட பல திரைப்படங்களில் காமெடி நடிகையாக நடித்துள்ளார். நடிகை ஆர்த்தி கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவரது மறைவிற்குப் பின் அதிமுகவிலிருந்து விலகி அரசியலில் இருந்தும் விலகி இருந்தார். தற்போது திடீரென அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். அவரது கணவர் கணேஷூம் பாஜகவில் இணைந்து கொண்டார். இதையடுத்து அண்ணாமலையுடன் ஆர்த்தி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் ஆகிய இருவரும் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.