Home » Archives by category » தமிழகம் (Page 69)

663 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் குறைப்பு

Comments Off on 663 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் குறைப்பு

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது. திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமான அளவில் குறைக்கப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த போது கூட இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் லாபத்தை பெற்று வந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக […]

Continue reading …

மூளை சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம்!

Comments Off on மூளை சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம்!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தளுகை பாதர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷின் மனைவி ராணி (50). கணவன் மனைவி இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் தங்களது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இதில் எதிர்பாராத விதமாக திருப்பத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் ராணி பலத்த காயமடைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் […]

Continue reading …

குழந்தைகள் கடத்தல் முற்றிலும் வதந்தி;- கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Comments Off on குழந்தைகள் கடத்தல் முற்றிலும் வதந்தி;- கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் அளித்த பேட்டியில், “வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தையை கடத்துவதற்காக நுழைந்துள்ளதாக வாட்ஸ் ஆப் மூலம் தகவல் வந்துள்ளது முழுக்க முழுக்க வதந்தி. இது குரல் பதிவுகளாக பரவி வருகிறது. கோவை மாவட்ட காவல்துறை சார்பில் இதனை 100% முழுக்க முழுக்க வதந்தி என கூற முடியும். இதை யாரும் நம்ப வேண்டாம். கூறியதுடன் வட மாநிலத்திலிருந்து கோவையில் நிறைய பேர் தொழில் […]

Continue reading …

மீண்டும் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

Comments Off on மீண்டும் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

இலங்கை கடற்படை அவ்வப்போது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கைது செய்து வருகிறது. இந்த தொடர் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என மீனவர் சங்கங்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றன. மத்திய மாநில அரசுகளும் இதுகுறித்து நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் நிற்கவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 15 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் […]

Continue reading …

லாட்டரி மார்ட்டினிடமிருந்து கோடிக்கணக்கில் நன்கொடை! தேர்தல் பத்திரத்தில் அம்பேல்!

Comments Off on லாட்டரி மார்ட்டினிடமிருந்து கோடிக்கணக்கில் நன்கொடை! தேர்தல் பத்திரத்தில் அம்பேல்!

லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வழியாக கோடிக்கணக்கில் வழங்கிய நிறுவனங்களில் அதிகளவில் நிதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கும் முறையை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தடை செய்ததுடன், இதுவரை தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்த விவரங்களை சமர்பிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வகையில் எஸ்பிஐ அளித்த விவரங்கள் தேர்தல் ஆணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அதிகளவில் தேர்தல் நன்கொடை பெற்ற […]

Continue reading …

ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா.

Comments Off on ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தருமத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா. தங்களது ராஜினாமா கடிதத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவனிடம் அளித்தனர்

Continue reading …

மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற வேட்பாளர்கள் அறிவிப்பு.

Comments Off on மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற வேட்பாளர்கள் அறிவிப்பு.

மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற வேட்பாளர்கள் அறிவிப்பு. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக மதுரை தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட சு.வெங்கடேசனும்  திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தனும்  (மாவட்ட செயலாளர்) வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

Continue reading …

நீலகிரியில் மூன்றாவது நாளாக காட்டுத்தீ. மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி.

Comments Off on நீலகிரியில் மூன்றாவது நாளாக காட்டுத்தீ. மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி.

நீலகிரியில் மூன்றாவது நாளாக காட்டுத்தீ. மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுத்தீ மூன்றாவது நாளாக எரிந்து வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார் தேவைப்படும் பட்சத்தில் ஹெலிகாப்டர் பயண்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி நீலகிரிமாவட்ட வன அலுவலகர் கௌதம் மற்றும் கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உடனிருந்தனர்

Continue reading …

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

Comments Off on திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் மதச்சார்பின்மையைச் சிதைக்கும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும் அரசியல் ஆதாயம் தேடும் பாசிச பாஜக அரசைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவனின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி மாவட்ட […]

Continue reading …

ஆதி நாராயணனை கொலை செய்ய முயற்சி.

Comments Off on ஆதி நாராயணனை கொலை செய்ய முயற்சி.

ஆதி நாராயணனை கொலை செய்ய முயற்சி. மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதி நாராயணனை கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அருகே அவரது கார் மீது மர்மநபர்கள் மற்றொரு காரை மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன் அவர் மீது பெட்ரோல் குண்டு வீசியும் தாக்கியுள்ளனர் அதிலிருந்து ஆதிநாராயணன் தப்பிய நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்..

Continue reading …