Home » Archives by category » தமிழகம் (Page 90)

BHEL தொழிற்சங்க வாயில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கும்..

Comments Off on BHEL தொழிற்சங்க வாயில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கும்..

மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் கழகத்தின் காவல் தெய்வம், தங்கத் தாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்களின்..76.வது பிறந்த தினத்தை முன்னிட்டு. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்..BHEL தொழிற்சங்க வாயில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கும்.. அதன் அருகே அமைக்கப்பட்டு இருந்த *மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின்* திருஉருவப்படத்திற்கும்.. மதிப்பிற்குரிய திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் BSc., BL.Ex.MP.* அவர்கள் மாலை அணிவித்து மலர் […]

Continue reading …

திருவரங்கத்தில் பரிதாபம்: மயங்கி விழுந்து போலீஸ்காரர் சாவு.

Comments Off on திருவரங்கத்தில் பரிதாபம்: மயங்கி விழுந்து போலீஸ்காரர் சாவு.

திருவரங்கத்தில் பரிதாபம்: மயங்கி விழுந்து போலீஸ்காரர் சாவு. போலீசார் விசாரணை. திருவரங்கம் போலீஸ் ஸ்டேசன் குற்றப் பிரிவில் பணியாற்றி வந்தவர் விநாயகமூர்த்தி. இவர் திருவரங்கம் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் இருந்த போது மயக்கம் வருவது போல் கூறியுள்ளார். உடனே அவரது மனைவி 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த மருத்துவர்கள் விநாயகமூர்த்தியை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக […]

Continue reading …

ஜெயலலிதா பிறந்தநாளை அன்னதானம்- நலத்திட்ட உதவிகள் மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி வழங்கினார்.

Comments Off on ஜெயலலிதா பிறந்தநாளை அன்னதானம்- நலத்திட்ட உதவிகள் மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி வழங்கினார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஜெயலலிதா பிறந்தநாளை அன்னதானம்- நலத்திட்ட உதவிகள் மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி வழங்கினார். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்பட்டது. திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே அவரின் உருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு சோமரசம்பேட்டை, காலை […]

Continue reading …

துவாக்குடி பகுதியில் 2-வது சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும். அதிமுக ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்டச் செயலாளர் ப.குமார் பேச்சு.

Comments Off on துவாக்குடி பகுதியில் 2-வது சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும். அதிமுக ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்டச் செயலாளர் ப.குமார் பேச்சு.

திருச்சி துவாக்குடி பகுதியில் 2-வது சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும். அதிமுக ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்டச் செயலாளர் ப.குமார் பேச்சு. திருச்சி, துவாக்குடி வட்டச்சாலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் இரண்டாவது சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தஞ்சை சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடிக்கு மிக அருகாமையில் (2 கி.மீ. தொலைவில்) அமைக்கப்பட்டுள்ள இதனை அகற்ற வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் திருச்சி புகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் […]

Continue reading …

திமுக அரசின் சாதனைகள விளக்கி வீடு தோறும் திண்ணைப் பிரச்சாரம்

Comments Off on திமுக அரசின் சாதனைகள விளக்கி வீடு தோறும் திண்ணைப் பிரச்சாரம்

ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி பொதுக்கூட்டங்கள்: திமுக அரசின் சாதனைகள விளக்கி வீடு தோறும் திண்ணைப் பிரச்சாரம். திருச்சி தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம். திருச்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், மாவட்ட கழக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், […]

Continue reading …

இலங்கையைச் சேர்ந்த சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை அனுப்பியுள்ளது.

Comments Off on இலங்கையைச் சேர்ந்த சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை அனுப்பியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை அனுப்பியுள்ளது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார் அதன் பின்னர்,  அவர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார் இலங்கை தமிழரான சாந்தனுக்கு ஜன.24-ஆம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயா் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி […]

Continue reading …

விபத்தில் சிக்கிய மேயர் பிரியா கார்!

Comments Off on விபத்தில் சிக்கிய மேயர் பிரியா கார்!

விபத்தில் சிக்கிய மேயர் பிரியா கார்! சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக காயமின்றி தப்பினார். ஓட்டுநருக்கு மட்டும் லேசான உள்காயம்! சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த மேயர் காரின் முன்னால் சென்ற கார், திடீரென திரும்பியதால் அதன் மீது மோதியது. இதனால் பின்னால் வந்த லாரி மேயர் பிரியா காரின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

Continue reading …

வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடியை கண்டித்து திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Comments Off on வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடியை கண்டித்து திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடியை கண்டித்து திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம். ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு. வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்ய வேண்டும், வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யும் பாஜக அரசை கண்டித்தும் இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்துவதை உறுதிப்படுத்த வலியுறுத்தியும், வாக்குச்சீட்டு முறையினை நடைமுறை படுத்த வலியுறுத்தியும் தமிழக முழுவதும் இன்று விடுதலை சிறுத்தைகளை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சியில் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற […]

Continue reading …

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Comments Off on தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பிய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எப்படி ரிட் தாக்கல் செய்ய முடியும்? என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாமா? என கேள்வி நீதிபதிகள் எழுப்பினர். இந்த விசாரணையில் மாவட்ட ஆட்சியர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல, விசாரணைக்காக மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டது என அமலாக்கத்துறை வாதம் செய்தது. ரிட் தாக்கல் செய்ய […]

Continue reading …

205 கிலோ குட்கா கடத்தல்!

Comments Off on 205 கிலோ குட்கா கடத்தல்!

போலீசார் திருவள்ளூர் அருகே வாகனத்தில் கடத்தி வந்த 205 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். செவ்வாப்பேட்டை போலீசாருக்கு திருவள்ளுர் அடுத்த காக்களூர் பகுதியில் வாகனத்தில் கடத்தி வந்த குட்கா பொருட்களை மற்றொரு வாகனத்தில் மாற்றப்பட்டு திருநின்றவூர் நோக்கி கொண்டு செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து செவ்வாப்பேட்டை தனிப்படை போலீசார் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து துரத்தி சென்று பிடித்து, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது வாகனத்தில் […]

Continue reading …