திமுக அரசின் சாதனைகள விளக்கி வீடு தோறும் திண்ணைப் பிரச்சாரம்

Filed under: தமிழகம் |

ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி பொதுக்கூட்டங்கள்: திமுக அரசின் சாதனைகள விளக்கி வீடு தோறும் திண்ணைப் பிரச்சாரம்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,
அமைச்சருமான
அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், மாவட்ட கழக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கே.என். சேகரன், செந்தில், சபியுல்லா, லீலாவேலு ,துணை மேயர் திவ்யா, கிழக்கு தொகுதி பார்வையாளர்கள் ஈரோடு பிரகாஷ், திருவெறும்பூர் தொகுதி பார்வையாளர்
சீ.கா மறைமலை மற்றும் மாவட்ட,மாநகர நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

மத்திய அரசு தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிதியைக் கூடத் தராமல் வஞ்சிக்கும் சூழலில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம், குடிசை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க 8 லட்சம் வீடுகள் கட்டித் தரும் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம், வறுமை இல்லாத் தமிழ் நாட்டை உருவாக்குவதற்காக 5 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டம் என பல்வேறு தரப்பினரையும் குறித்துச் சிந்தித்து, தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொருவரும் பயன்படும் வகையில் நிதிநிலை அறிக்கையில் திட்டங்களை அறிவித்து, திராவிட மாடலை உலகமே பாராட்ட செய்து வரும் முதலமைச்சரின் சீரிய நிர்வாகத் திறனையும், வழிகாட்டும் பாங்கையும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் மனமார வாழ்த்தி நன்றி பாராட்டுகிறது.

தி.மு.க ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வீடுதோறும் கொண்டு சேர்க்கவும், அதேசமயம் மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளைத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில், பிப்ரவரி 26-ந் தேதியன்று ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில். திண்ணைப் பிரச்சாரத்தைத் தொடங்குவது
இதற்கென வரும் 24, 25 ஆகிய நாட்களில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தனித்தனியாக, தொகுதிப் பார்வையாளர்கள், பி.எல்.ஏ-2, பூத் கமிட்டி உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளைக் கொண்டு கூட்டங்களை நடத்தி, மக்களை அணுகுவது குறித்து ஆலோசிக்கவும், 26-ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி, ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை குறித்து சில நிமிடங்களாவது விளக்கி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதனோடு மறைமுகக் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.வை முழுமையாக வீழ்த்தி, கழகத் தலைவரின் குரல் டெல்லியிலும் நிறைவேறுவதை உறுதிசெய்திட வேண்டும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் மார்ச் 2,3-ந்தேதிகளில் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.