
புதிய சமூக வலைதளமான KYN அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. HYPER-LOCAL முறையில் உருவாகியுள்ள இந்த செயலி, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் Dr.பழனிவேல் தியாகராஜன் KYN செயலியைத் தொடங்கி வைத்தார். KYN என்பதன் விரிவாக்கம் Know Your Neighbourhood. இது நமது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் HYPERLOCAL முறையில் இது ஒன்றிணைக்கும். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் Dr. PTR […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஜூன் 14ல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பிப்ரவரி 16ல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்தது. அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் […]
Continue reading …
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வேளாண் பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். இன்று விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தமிழக சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள் இந்த பட்ஜெட்டை வரவேற்று வருகின்றன. வேளாண் பட்ஜெட் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவுமில்லை, வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லை. மேலும் தமிழ்நாட்டில் வேளாண் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. […]
Continue reading …
ஆயத்த பணிகளை மேற்கொண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும். திருச்சி அதிமுக இளைஞர் பாசறை கூட்டத்தில் தீர்மானம. திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. இளைஞர், இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி பாசறை என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட பாசறை செயலாளர் இலியாஸ் தலைமை தாங்கினார். இதில் மாநில […]
Continue reading …
திருச்சி குண்டூர் பகுதியைச் சேர்ந்தவிவசாய கூலி தொழிலாளியின் மகன் சிவில் நீதிபதியாக தேர்வு. திருச்சி மாவட்டம் குண்டூர் அருகே உள்ள அயன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகனான பாலமுருகன் (23) சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். மாநில அளவில் 33வது இடத்தையும், திருச்சி மாவட்டத்தில் முதலிடமும் பிடித்துள்ளார். எளிய ஓட்டு வீட்டில் படித்து நீதிபதியான இவரை அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலரும் நேரில் சென்று பாராட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில், காலியாக உள்ள 245 […]
Continue reading …
நெல்லையில் நிறைவுற்ற திட்ட பணிகளை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு. அப்பாவு தலைமையில்,நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் முடிவுற்ற பல்வேறு திட்ட பணிகளை திறந்து வைத்தும்,புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் விழாப் பேருரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா […]
Continue reading …
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு முகாம். சுமார் 400 பேருக்கு பணியாணைகள். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில், சுமார் 400 பேருக்கு பணியாணைகள் வழங்கப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மையம், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாநில அளவிலான தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், வேலை வாய்ப்பு முகாமை திருச்சி, காஜாமலை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. பல்கலைக்கழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ந.பிரசன்னா […]
Continue reading …
அஸ்வின் பெயரில் ரூ.500 நோட்டு.. வைரல். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதை கொண்டாடும் விதமாக ரூ.500 நோட்டில் காந்தி முகத்திற்கு பதிலாக அஸ்வின் முகத்தை எடிட் செய்து நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலர் வாழ்த்து தெரிவித்தாலும், இது ரூபாய் நோட்டை அவமதிக்கும் செயல் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Continue reading …
சாலையோரம் கிடந்த தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு. தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியை சேர்ந்த குமார் என்ற நபர் 15.02.2024 அன்று இரவு நேரத்தில் அவரது மனைவியுடன் ஆய்க்குடி மாயாண்டி கோவில் அருகே உள்ள கடைக்குச் சென்று வீடு திரும்பும் வழியில் சாலையோரம் கீழே கிடந்த சுமார் 2,50,000/- ரூபாய் மதிப்பிலான 05 பவுன் தாலி செயினை எடுத்து உரிய முறையில் ஆய்க்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். […]
Continue reading …
2024 பாராளுமன்ற தேர்தல் 1947 ல் சுதந்திரத்திற்கு போராடியது போன்று முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை என்றால் நாட்டில் ஜனநாயகம் மறைந்துவிடும், மக்களாட்சி மறைந்துவிடும் என மார்த்தாண்டத்தில் நடைபெற்ற மகிளா காங்கிரஸ் மாநாட்டில் விஜய்வசந்த் எம் பி பேச்சு.
Continue reading …