Home » Archives by category » விளையாட்டு

பிசிசிஐ செயலாளர் யார்?

ஜெய்ஷா ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த பிசிசிஐ செயலாளர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, தற்போது பிசிசிஐ செயலாளராக இருக்கிறார். ஐசிசி தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் இதற்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜெய்ஷா ஐசிசி தலைவர் பதவி போட்டியிட்டால் அவர் கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற்று விடுவார் என்று கூறப்படுகிறது. பிசிசிஐ செயலாளராக இருக்கும் […]

ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்!

Comments Off on ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்!

இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மல்யுத்தம் என்னை வீழ்த்திவிட்டதாக வினேஷ் போகத் வேதனையுடன் பதிவு செய்துள்ளார். இதற்கு மேல் போராட தன்னிடம் பலம் இல்லை என உருக்கமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும், “என்னை மன்னியுங்கள் அம்மா, மல்யுத்தம் என்னை வென்றுவிட்டது, நான் தோற்றுவிட்டேன். உங்கள் கனவுகளும் என் தைரியமும் உடைந்துவிட்டது. இனியும் சண்டையிட எனக்கு வலிமை இல்லை” என்று கூறியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட […]

Continue reading …

இன்னொரு இந்திய வீராங்கனை தகுதிநீக்கம்!

Comments Off on இன்னொரு இந்திய வீராங்கனை தகுதிநீக்கம்!

வினேஷ் போகத் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இன்னொரு இந்திய மல்யுத்த வீராங்கனையும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பாரிஸ் நகரில் கடந்த சில நாட்களாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஒலிம்பிக் விதிகளை மீறியதற்காக இந்திய மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கல் என்பவர் தகுதி […]

Continue reading …

வினேஷ் போகத் தகுதி நீக்கம்; ராகுல் காந்தி வருத்தம்!

Comments Off on வினேஷ் போகத் தகுதி நீக்கம்; ராகுல் காந்தி வருத்தம்!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார். வினேஷ் போகத் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வினேஷ் […]

Continue reading …

வினேஷ் போகத் தகுதி நீக்கம்; நடிகைகள் கண்டனம்!

Comments Off on வினேஷ் போகத் தகுதி நீக்கம்; நடிகைகள் கண்டனம்!

வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ மல்யுத்த பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். ஆனால், திடீரென அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஒலிம்பிக் கமிட்டிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும், திரையுலகை சேர்ந்தவர்களும் தங்களது சமூக வலைதளங்களில் இதுபற்றிய தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் நடிகை சமந்தா, “சில நேரங்களில் மிகவும் கடினமான […]

Continue reading …

பஞ்சாப் முதல்வர் ஆவேசம்!

Comments Off on பஞ்சாப் முதல்வர் ஆவேசம்!

பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் சிங் உடல் எடை அதிகமானதை அவரது பயிற்சியாளர்கள் கவனிக்கவில்லையா? அவர்கள் பயிற்சி கொடுக்க சென்றார்களா? அல்லது விடுமுறைக்கு சென்றார்களா? என ஆவேசமாக கூறியுள்ளார். பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். பின் செய்தியாளர்களிடம் அவர், “இந்த தவறு உயர்மட்ட அளவில் நடந்துள்ளது. பயிற்சியாளர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் நிலையில் அவர்கள் உடல் எடையை முதலில் கவனிக்க […]

Continue reading …

சர்வதேச ஒலிம்பிக் திட்டவட்டம்; வினேஷ் போகத் நீக்கத்தில் மாற்றமில்லை!

Comments Off on சர்வதேச ஒலிம்பிக் திட்டவட்டம்; வினேஷ் போகத் நீக்கத்தில் மாற்றமில்லை!

சர்வதேச ஒலிம்பிக் சங்கம் வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத், உடல் எடையை காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வினேஷ் போகத்தின் கனவு தகர்ந்தது. வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக ஒலிம்பிக் கமிட்டி தலைவரிடம் பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியானது. மீண்டும் […]

Continue reading …

வினேஷ் போகத்துக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்!

Comments Off on வினேஷ் போகத்துக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வினேஷ், நீங்கள் ‘ஒவ்வொரு வகையிலும்’ உண்மையான சாம்பியன் என்று புகழாரம் சூட்டியுள்ளார். வினேஷ் போகத் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆனால் அவர் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற 140 கோடி மக்களின் கனவு 100 கிராம் எடையில் தகர்ந்து போனது. வினேஷ் போகத்திற்கு இந்தியா முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் […]

Continue reading …

துருக்கி வீரரின் கலக்கல் குட்ஷாட்!

Comments Off on துருக்கி வீரரின் கலக்கல் குட்ஷாட்!

பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நேற்று ஏழு மாத கர்ப்பிணி பெண் வாள்வீச்சு போட்டியில் விளையாடி உலகின் கவனத்தை ஈர்த்தார். துருக்கி நாட்டு வீரர் டிகேக் இப்போது துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதற்குக் காரணம் அவர் துப்பாக்கிச் சுடுதலின் போது எவ்தமான உதவி உபகரணங்களையும் பயன்படுத்தவில்லை. பொதுவாக […]

Continue reading …

இந்தியா பெற்றது 3வது தங்கம்!

Comments Off on இந்தியா பெற்றது 3வது தங்கம்!

இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது. 26-ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிச் சுற்றில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். அவர் 451.4 புள்ளிகள் பெற்று 3-ம் இடம் […]

Continue reading …
Page 1 of 21123Next ›Last »