Home » Archives by category » விளையாட்டு (Page 12)

ஐ.பி.எல். தொடர்: ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுமா கொல்கத்தா அணி?

Comments Off on ஐ.பி.எல். தொடர்: ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுமா கொல்கத்தா அணி?

துபாய், அக் 4: ஐ.பி.எல். தொடரில் நேற்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 48வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவரில் […]

Continue reading …

ஐபிஎல் தொடர்: கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்

Comments Off on ஐபிஎல் தொடர்: கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்

துபாய், அக் 2: ஐபிஎல் தொடரில்,  பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த போட்டியில், பஞ்சாப் அணி வெற்றிபெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 45வது போட்டி நேற்று நடந்தது. இதில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. வெங்கடேச […]

Continue reading …

ஐபிஎல் தொடர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அமோக வெற்றி

Comments Off on ஐபிஎல் தொடர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அமோக வெற்றி

துபாய், அக் 1: ஐபிஎல் போட்டியில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 44வது போட்டி நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து, சென்னை […]

Continue reading …

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: டெல்லியை பந்தாடிய கொல்கத்தா

Comments Off on ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: டெல்லியை பந்தாடிய கொல்கத்தா

துபாய், செப் 29: ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையிலான போட்டியில், கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்டில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. இதன் 41வது லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் […]

Continue reading …

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு திடீர் நெஞ்சுவலி

Comments Off on பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு திடீர் நெஞ்சுவலி

இஸ்லாமாபாத், செப் 28: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு, நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக், 51, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தவர். அவர் 375 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11,701 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 119 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,829 ரன்களை அவர் குவித்துள்ளார். […]

Continue reading …

சூடுபிடிக்கும் ஐபிஎல் தொடர்: அடுத்த சுற்றுக்குள் நுழையும் அணி எது?

Comments Off on சூடுபிடிக்கும் ஐபிஎல் தொடர்: அடுத்த சுற்றுக்குள் நுழையும் அணி எது?

துபாய், செப் 28: நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், யாரும் எதிர்பாராத வகையில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றதால், அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் நான்காவது அணி எது என்பதில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. இதன் 40வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவரில் […]

Continue reading …

ஐபிஎல் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடம்

Comments Off on ஐபிஎல் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடம்

அபுதாபி, செப் 27: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனை […]

Continue reading …

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிம்பு பாடிய பாடல் !

Comments Off on சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிம்பு பாடிய பாடல் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு, இவர் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில், மாநாடு, பத்து தல உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.  விரைவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு பாடல் பாடியுள்ளார், இப்பாடல் இன்று ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சென்னை – மும்பை அணிகள் இடையேயான […]

Continue reading …

உலக சாதனை படைத்த சுமித் அண்டில்!

Comments Off on உலக சாதனை படைத்த சுமித் அண்டில்!

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீரர் சுமித் அண்டில். டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பலரும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களுடன் 34ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் 68.55 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து உலக சாதனை படைத்துள்ளதுடன் தங்க பதக்கத்தையும் உறுதிப்படுத்தியுள்ளார். […]

Continue reading …

டோக்கியோ பாராலிம்பிக்சில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து!

Comments Off on டோக்கியோ பாராலிம்பிக்சில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டோக்கியோ பாராலிம்பிக்சில் வெற்றி பெற்றவர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி :   தேசிய விளையாட்டு நாளன்று டோக்கியோ பாராலிம்பிக்சில் இந்தியாவுக்குப் பதக்க மழை பொழிகிறது. உயரம் தாண்டுதல் மற்றும் வட்டு எறிதலில் ஆசிய சாதனையுடன் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள நிஷாத் குமார், வினோத் குமார் ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continue reading …