இந்திய அணியின் கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி 100வது வெற்றியை இன்று ருசித்தது ! உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இன்று வங்கதேச அணியை வீழ்த்தியது. இதுவரை தோனி தலைமையில் இந்திய அணி, 176 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 100 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 69 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. மெல்பர்னில் இன்று தோனி தலைமையில் இந்திய அணி கண்டது 100வது வெற்றி ஆகும். இந்திய அணி கிரிக்கெட் கேப்டன்கள் […]
Continue reading …உலகக் கோப்பை போட்டி காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. . உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதியில் தென்ஆப்ரிக்க அணி, இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில், இந்திய அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொண்டது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து ரோகித் சர்மாவும், ஷிகர் […]
Continue reading …பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிட்னியில் புதன்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் காலிறுதி ஆட்டம் எந்த ஒரு தாக்கத்தையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தாமல் தென் ஆப்பிரிக்க அணியின் முதல் நாக்-அவுட் வெற்றியாக அமைந்தது. புள்ளி விவரங்களின்படி 270 ரன்களை இலங்கை எடுத்தால் தென் ஆப்பிரிக்கா இலக்கைத் துரத்த முடியாது போகும் என்று கணிக்கப்பட்டது. போட்டிக்கு முன் என்னென்னவோ கணிப்புகள், பார்வைகள் என்று சலசலப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால், தென் ஆப்பிரிக்கா தனது தொழில்பூர்வ ஆட்டத்திறமையினால் இலங்கையை […]
Continue reading …பெர்த்தில் நடைபெற்ற யு.ஏ.இ. அணிக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.யு.ஏ.இ. டாஸ் வென்று முதலில் பேட் செய்து அஸ்வின் உள்ளிட்டோரின் அபார பந்துவீச்சிற்கு 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பெற்று 6 புள்ளிகளுடன் இந்தப் பிரிவில் முதலிடம் வகிக்கிறது.ரோஹித் […]
Continue reading …நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில், முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 152 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் நியூஸிலாந்து களமிறங்கியுள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலிய அணிக்கு முதல் இரண்டு ஓவர்கள் மட்டுமே சிறப்பாக இருந்தன. 2 ஓவர்களில் 24 ரன்கள் என்ற நிலையில் சவுத்தீ வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தை ஃபின்ச் சிக்ஸருக்கு விளாசினார். ஆனால் அடுத்த பந்திலேயே […]
Continue reading …உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெய்ல் நிகழ்த்தினார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் இரட்டை சதம் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். கான்பெர்ராவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. துவக்க வீரர் ஸ்மித் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழக்க, தொடர்ந்து ஜோடி சேர்ந்த சாமுவேல்ஸ், கெய்ல் […]
Continue reading …மெல்பர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் 130 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி புதிய வரலாற்றை இந்திய கிரிக்கெட் அணி படைத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலக கோப்பை போட்டிகளில் பரம எதிரி பாகிஸ்தானைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவையும்வீழ்த்தியுள்ளதால் உலகக் கோப்பை காலிறுதிக்கு தடையேதும் இல்லாமல் முன்னேறும் வாய்ப்பைப் பெற்று இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. முன்னதாக பேட் செய்த இந்தியா 308 ரன்கள் என்ற இலக்கை, வெற்றி பெற தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது. […]
Continue reading …ஆசிய விளையாட்டு ஆடவர் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்தியாவுக்கு இவர் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4வது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.இன்சியானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு மல்யுத்தம், 65 கிலோ உடல் எடைப்பிரிவில், அரையிறுதியில் சீனாவின் யீர்லான்பீக் என்பவரை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார் யோகேஷ்வர் தத். இன்று தோவான் ஜிம்னாசியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தாஜிகிஸ்தான் வீரர் ஜாலிம்கான் யுசுபோவ் என்ற வீரரை 3-0 என்று அதிரடி வெற்றி பெற்று […]
Continue reading …ஸ்காட்லாந்து: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.கடந்த 23 ஆம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. இதன் நிறைவு விழா ஹம்ப்டன் அரங்கில், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் நிறைவடைந்தது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி அளவில், நிறைவு விழா நிகழ்ச்சிகள் களைகட்ட தொடங்கின.முதலில் நட்சத்திரம் வடிவிலான விழா மேடையின் எதிரே, குடில்கள் போல் வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கூடாரங்களை கொண்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடனமாடினர். பின்னர், […]
Continue reading …காமன்வெல்த் ஹாக்கி இறுதிச் சுற்றில், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்ற இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. கிளாஸ்கோவில் இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி 0-4 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. ஆடவர் ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடம் வகித்ததால், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிட்டியது. முன்னதாக, 2010-ல் நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் இந்தியாவை ஆஸ்திரேலிய ஹாக்கி அணி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில், தனக்கு கிடைத்த மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் […]
Continue reading …