இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால் நள்ளிரவு 1 மணிவரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல்-2023 &16வது சீசன் தற்போது நடைபெறுகிறது. இதில், மொத்தம் 10 அணிகள் இடம்பெற்று விளையாடி வருகின்றனர். இம்முறை யார் கோப்பையைக் கைப்பற்றுவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் எழுந்துள்ளது. அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன. இன்று சென்னை சேப்பாக்கத்தில், ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி […]
Continue reading …பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் இன்று சட்டப்பேரவையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்று ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியை காண டிக்கெட் வாங்குவதற்காக முந்தைய நாள் இரவிலிருந்து வரிசையில் காத்திருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை […]
Continue reading …கிரிக்கெட் வீரர் தோனி புதியதாக திரைப்பட நிறுவனத்தை தொடங்கி உள்ளார். அந்நிறுவனத்தின் பெயர் தோனி என்டர்டைன்மெண்ட் பிரைவேட் லிமிடெட். இந்நிறுவனத்தின் சார்பில் தோனியின் மனைவி சாக்சி தோனி தமிழ் படம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்த படத்தின் டைட்டில் சற்று முன் அறிவிக்கப்பட்டது. “எல்ஜிஎம்” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு உட்பட்டோர் நடிக்கவுள்ளனர். படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி வருகிறார். இன்று இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாக […]
Continue reading …இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் அதில் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவெடுத்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸி அணியில் டிராவிஸ் ஹெட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சீரான இடைவெளியில் ஸ்மித் மற்றும் லபுஷான் ஆகியோர் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி சதத்தை நெருங்கிய மிட்செல் மார்ஷ் […]
Continue reading …மார்ச் 4ம் தேதி முதல் மகளிர் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது. தொடக்க விழாவில் பிரபல பாலிவுட் நடிகைகள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. 5 அணிகள் இதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த அணிகளுக்கான வீராங்கனைகள் சமீபத்தில் ஏலம் எடுக்கப்பட்டனர். மகளிர் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 4ம் தேதி முதல் தொடங்கவிருப்பது என்பதும் முதல் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன. போட்டியை 7:30 மணிக்கு […]
Continue reading …கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று முதல் அரை இறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது. இன்றைய அரையிறுதி போட்டியின் டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி அதிரடியாக பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா மகளிர் அணி வீராங்கனைகள் இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளனர். இன்றைய போட்டியில் வெல்லும் […]
Continue reading …இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வீரரான பிரித்வி ஷா மீது நடிகை பரபரப்பு புகாரளித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் மும்பை சாண்டாக்ரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டு இந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமான ப்ரித்வி ஷா வெளியே வந்துள்ளார். அப்போது இன்ஸ்டா பிரபலமும், நடிகையுமான ஸ்வப்னா கில் செல்பி எடுப்பதற்காக ப்ரித்வி ஷாவை அணுகியதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஸ்வப்னா கில் மற்றும் […]
Continue reading …கிரிக்கெட் வீரர் என் பயோபிக் படத்தை ரிலீஸ் செய்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் சோயிப் அக்தர் 161.3 கிமீ வேகத்தில் பந்துவீசி இதுவரை அதிக வேகத்தில் பந்து வீசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை வைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக அவர் விளையாடிய காலம் முழுவதும் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமலேயே விளையாடினார். கடந்த 2011ம் ஆண்டு இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இப்போது வர்ணனையாளராகவும் விமர்சகராகவும் செயல்பட்டு வரும் […]
Continue reading …கேரளா வீரர் ஒருவர் ஓமன் நாட்டில் பேட்மிண்டன் விளையாடிகொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சுருண்டு விழுந்து மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓமன் நாட்டில் கேரளாவை சேர்ந்த பேட்மிட்டன் வீரர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்தார். சாதாரணமாகத்தான் விழுந்தார் என அவரது நண்பர்கள் இணைத்த போது அவருக்கு மாரடைப்பு வந்ததால் தான் மயங்கி விழுந்தார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் […]
Continue reading …பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தொழில்முறை டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதை உறுதிபடுத்தியுள்ளார். பிப்ரவரி மாதம் துபாயில் நடைபெறும் WTA 1000 போட்டியோடு முன்னாள் இரட்டையர் உலக நம்பர் 1 சாம்பியனான சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மகளிர் டென்னிஸ் சங்கத்தின் (WTA) இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் தனது ஓய்வு குறித்து மிர்சா பேசினார். 36 வயதான அவர் ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பிரிவில் கஜகஸ்தானின் அன்னா டானிலினாவுடன் இணைந்து விளையாடுகிறார். […]
Continue reading …