Home » Archives by category » Uncategory

தென்னக ரயில்வேயின் அறிவிப்பு!

தென்னக ரயில்வே கேரளாவுக்கு இயக்கப்படும் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். தென்னக ரயில்வே தமிழகம் உள்பட கேரளாவுக்கு இயக்கப்படும் 22 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் முதல் காயங்குளம் என்ற பகுதி வரை ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு செல்லும் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே […]

உடுமலை அதிமுக பெண் கவுன்சிலர் மரணம்!

Comments Off on உடுமலை அதிமுக பெண் கவுன்சிலர் மரணம்!

அதிமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் திடீரென இன்று காலமானார். உடுமலை 7-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் ரம்யா என்பவர் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ரம்யா கடந்த சில நாட்களாக, நோய்வாய்ப்பட்டு இருந்திருக்கிறார். ரம்யாவை, கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். தகவல் அறிந்த உடுமலை, திருப்பூர் மாவட்ட அதிமுகவினர், நகர்மன்ற உறுப்பினர்கள் அவருடைய மறைவுக்கு இரங்கல் […]

Continue reading …

சீமானின் கருத்து!

Comments Off on சீமானின் கருத்து!

சீமான் “மனிதனே மனிதனை பல்லக்கில் தூக்குவதா, அது இழிவான செயல்” என்று கூறியுள்ளார். தருமபுரம் ஆதீனம் பல்லக்கு தூக்கும் விவகாரம் மாபெரும் சர்ச்சையாகி பேசப்பட்டு வருகிறது.   தருமபுர ஆதீனம் பட்டண பிரவேச நிகழ்ச்சி வருகிற மே 27ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அன்று ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் […]

Continue reading …

பள்ளிக்கல்வித்துறை சாதி அடையாள கயிறுகளுக்கு தடைவிதித்து உத்தரவு

Comments Off on பள்ளிக்கல்வித்துறை சாதி அடையாள கயிறுகளுக்கு தடைவிதித்து உத்தரவு

பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பள்ளிகளில் சாதியை அடையாளமிட்டு காட்டுவதற்காக கட்டப்படும் கயிறுகளுக்கு தடை என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   சமீபத்தில் பள்ளிகளில் சாதி அடையாள கயிறு கட்டும் மோதல் காரணமாக நெல்லை அருகே உள்ள ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தால் சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான கயிறுகளை மாணவர்கள் அணியக்கூடாது என்றும், சாதி அடையாள கயிறுகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் பள்ளி கல்வித்துறை […]

Continue reading …

டூடூடூ பாடல் வீடியோ ரிலீஸ்

Comments Off on டூடூடூ பாடல் வீடியோ ரிலீஸ்

காத்துவாக்குல ரெண்டு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஒரு ரவுண்ட் அடித்து வருகிறது.   விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் இப்படத்தில் நடித்துள்ளனர். வசூலிலிலும் ஓரளவுக்கு திருப்திகமாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இன்று சற்று முன்னர் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “டூடூடூ” பாடலின் வீடியோ வெளியாகியயுள்ளது. இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது. சமந்தா மற்றும் நயன்தாராவின் அசத்தலான நடனத்தில் உருவாகியுள்ள இந்த பாடலை அனிருத் மற்றும் சுனிதி சௌஹான், சஞ்சனா கால்மாஞ்சே […]

Continue reading …

அதிர்ச்சியில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள்!

Comments Off on அதிர்ச்சியில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள்!

600 கிளைகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது நூறு ஆண்டு பழமையான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி. இதனால் அதன் வாடிக்கையாளர்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு முதல் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி வாராக்கடன் காரணமாக நஷ்டம் அடைந்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி இந்த வங்கியை சீரமைக்கும் வகையில் 600 கிளைகளை மூட ஆலோசனை கூறியுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 600 கிளைகளை மூடுவது அல்லது வேறு […]

Continue reading …

காவலர்கள் இழந்த கோடிகள்!

Comments Off on காவலர்கள் இழந்த கோடிகள்!

சென்னை காவல் ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கோடிக்கணக்கில் காவலர்கள் கிரிப்போடி கரன்சி மோசடியில் இழந்தது தெரியவந்துள்ளது. சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் சுற்றறிக்கையில் கிரிப்டோகரன்சி மோசடியில் காவலர்களை கோடிக்கணக்கில் பணத்தை இழந்ததாக தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த இரண்டு காவலர்கள் கிரிப்டோகரன்சி மோசடியில் ஒன்றரை கோடி ரூபாய் இழந்துள்ளதால், சமூக வலைதளங்கள் மூலம் இதுபோன்ற மோசடி நிறுவனங்களை நம்பவேண்டாம் எனவும், அவர்களுக்கு சென்னை காவல்துறை ஆணையர் சங்க சுற்றறிக்கை […]

Continue reading …

ஷவர்மாவினால் உயிரிழந்த மாணவி இறப்புக்கு காரணம் என்ன?

Comments Off on ஷவர்மாவினால் உயிரிழந்த மாணவி இறப்புக்கு காரணம் என்ன?

ஷவர்மா என்ற உணவை சாப்பிட்ட பள்ளி மாணவி கேரள மாநிலம் காசர்கோட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவத்தூர் எனும் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி தேவநந்தா. உறவினர் வீட்டில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். தேவநந்தாவும் அவருடன் பள்ளியில் படிக்கும் 17 மாணவர்களும் சேர்ந்து கரிவலூரில் உள்ள துரித உணவகம் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். அடுத்த சில […]

Continue reading …

12 பேர் இலங்கை கடற்படையால் கைது

Comments Off on 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் இலங்கை மன்னாரிலிருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு படகில் வர முயன்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் மற்றும் படகோட்டிகள் இருவர் உட்பட 14 பேரை தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர்.   இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக திருகோணமலையை சேர்ந்த 7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் என 3 குடும்பத்தை சேர்ந்த 12 நபர்கள் மற்றும் மன்னாரை சேர்ந்த படகோட்டிகள் இருவர் ஒரு பைபர் படகில் […]

Continue reading …

பேருந்துகளில் கட்டுமான தொழிலாளர்களுக்கும் டிக்கெட் இல்லை

Comments Off on பேருந்துகளில் கட்டுமான தொழிலாளர்களுக்கும் டிக்கெட் இல்லை

டெல்லி அரசு ஏற்கனவே பெண்களுக்கு பேருந்துகளில் டிக்கெட் இல்லை என்று அறிவித்திருந்தது. தற்போது கட்டுமான தொழிலாளர்களுக்கும் டிக்கெட் இல்லை என அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டது டெல்லியில் ஆட்சி நடத்திவரும் ஆம் ஆத்மி கட்சி தான். தற்போது மகளிர்களை அடுத்து டெல்லியில் உள்ள கட்டுமான தொழிலாளர்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தகவல் தெரிவித்துள்ளார். இதனால் 10 லட்சம் […]

Continue reading …
Page 1 of 12123Next ›Last »