திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையில் குவாட்டர் பாட்டில் வைத்து விருந்தினர்களுக்குக் கொடுத்த நபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த மே 28ம் தேதி, வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது, தாம்பூல பையில் ஒரு குவாட்டர் பாட்டிலையும் வைத்து விருந்தினர்களுக்கு பெண் வீட்டார் கொடுத்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தாம்பூல பையில் குவாட்டர் பாட்டிலை எடுத்து வைப்பதை பார்த்த விருந்தினர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். இதற்கு […]
Continue reading …அரசு பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் பணிச் சலுகை வழங்குவதாக புதுசை அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் அரசுத் துறைகளில் பணியாற்ற்றும் பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று காலை நேரம் 2 மணி நேரம் பணி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிச்சலுகை அறிவிப்பை இன்று முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கவர்னர் தமிழிசை கூட்டாக அறிவித்தனர். இதற்கான அரசாணை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், வெள்ளிக்கிழமை தோறும் பெண்களின் பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் பூஜை செய்ய வெள்ளிக்கிழமைகளில் காலை […]
Continue reading …தமிழக மீனவர்கள் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது புதுவை மீனவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மீனவர் குப்பத்தில் வசிக்கும் மீனவர்கள் சிலர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கடற்கரையிலிருந்து சுமார் 10கிமீ தூரத்தில் ஆழ்கடல் பகுதியில் காலை 6 மணிக்கு அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் அப்பகுதிக்கு வந்தனர். அப்போது, தமிழக […]
Continue reading …புதுச்சேரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமென மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக புதுவை மற்றும் தமிழ்நாடு முழுதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரி மாவட்ட கலெக்டர், “பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவது கட்டாயம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பொது இடங்களான […]
Continue reading …காலைக்கால் கலெக்டர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் காரைக்காலைச் சேர்ந்த 35 வயது பெண் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்த மருத்துவர்கள், இணை நோய்கள் அவருக்கு இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் விளக்கமளித்தனர். காரைக்கால் மாவட்டத்தில், கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காரைக்காலில் ஒன்றரை ஆண்டிற்குப் பின் கொரொனா […]
Continue reading …புதுச்சேரி சட்டமன்றத்தில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். சமீபத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சமீபத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்திக்கு தகுதி நீக்கத்தை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் செய்ததால் மாலை வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று பாண்டிச்சேரியில் சட்டமன்ற கூட்டத்தொடர் காலை தொடங்கிய போது ராகுல் […]
Continue reading …புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி எங்களுக்கு அதிகாரமும் இல்லை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இல்லை என வேதனையுடன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் புதுவை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகியது. புதுவை மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னரே தாக்கல் ஆகும் என்பதால் இது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். யூனியன் […]
Continue reading …புதுசை முதலமைச்சர் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறிய போது பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் தற்காலிக ஊதியர்கள் தற்போது மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊழியமாக பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 5000 ரூபாய் உயர்த்தப்படும் என்றும் இனி அவர்கள் 15000 என ஊதியம் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுப்பணி துறையில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்து முதலமைச்சர் ரங்கசாமிக்கு தங்களது நன்றியை […]
Continue reading …பரோட்டா சாப்பிட்டு இரவு தூங்கிய இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரி மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியை அடுத்த சுல்தான்பேட்டையில் ஏராளமான ஓட்டல்களில் விதவிதமான அசைவ உணவுகள் பரிமாறப்பட்டு வருகின்றனர். இதை விரும்பி, ஏராளமான வாடிக்கையாளர்கள் அங்கு சென்று சாப்பிட்டு வருகின்றனர். சில கடைகளில் சுகாதாரமின்றி சமைப்படுவதாகவும் புகார் எழுந்து வருகிறது. புதுச்சேரி வில்லியனூர் அருகேயுள்ள ஆரியப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராசுவின் கனன் சத்யமூர்த்தி (33). இவர், சென்னையிலுள்ள தனியார் ஐடி கம்பெனியில் […]
Continue reading …விரைவில் புதுவையில் பிரிபெய்டு மின் திட்டம் கொண்டு வரப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரியில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தற்போது மின் மீட்டரில் கணக்கு எடுக்கப்பட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் நுகர்வோர் உடன் பிரீபெய்டு மின் கட்டணம் வசூலிக்க புதுவை மின்சாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் இந்த திட்டத்தின் மூலம் 4 லட்சம் ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மின் மின் மீட்டர்கள் […]
Continue reading …