Cook With Comali: குக் வித் கோமாளி புகழுக்கு நடிகர் சந்தானம் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!!

Filed under: சினிமா |

Cook With Comali: குக் வித் கோமாளி புகழுக்கு நடிகர் சந்தானம் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!!

குக் வித் கோமாளி புகழுக்கு நடிகர் சந்தானம் கிஃப்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி முதல் சீசனின் டைட்டிலை பிக் பாஸ் வனிதா விஜயகுமார் வென்றார். அதில் ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். இதனையடுத்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர். போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா ஆகிய 3 பேரும் எலிமினேட் ஆன நிலையில், மற்ற 5 பேரும் போட்டியில் இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியை கலகலப்பாக்குவதில் கோமாளிகளின் பங்கு அதிகம். அதனால் கோமாளிகளுக்கு என தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன. குறிப்பாக புகழும், சிவாங்கியும் செய்யும் காமெடிகள் பார்வையாளர்களை வயிறு குலுங்கி சிரிக்க வைக்கும்.


இதற்கிடையே சில நாட்களுக்கு முன்னர் கார் வாங்கிய விஷயத்தை தெரிவித்திருந்தார் புகழ். கார் க்ளீனராக இருந்த தான், இன்று புதிய கார் வாங்கியிருப்பதை பெருமிதத்துடன் பகிர்ந்துக் கொண்டார். இந்நிலையில் புகழின் காரை நடிகர் சந்தானம் ஓட்டிப் பார்த்திருக்கிறார். அதோடு காரில் வைக்கும் படி வெள்ளியில் ஒரு விநாயகர் சிலையும் பரிசளித்திருக்கிறார். ‘உடனே ஒட்டணும்ன்னு அண்ணன் சொல்லிருந்தாரு இல்ல, பாருங்க உடனே ஒட்டிட்டேன்’ என இதுகுறித்த வீடியோவையும் பதிவிட்டிருக்கிறார் புகழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *