பழுதடைந்த ரத்த சேகரிப்பு பேருந்தால் ரத்த சேகரிப்பு பாதிப்பு.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள நடமாடும் ரத்த சேகரிப்பு பஸ் மற்றும் இரண்டு ரத்த சேகரிப்பு வேன்கள், கடந்த பதினைந்து ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
இந்த நிலையில், ரத்த சேகரிப்பு பஸ் பழுதடைந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், ரத்த சேகரிப்பு தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
உடனடியாக இவற்றை சரி செய்ய வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறுகின்றனர்.