திருமால் அடியார்கள் குழாம் சார்பில் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உள்ளே பக்தர்கள் தர்ணா போராட்டம்.
பரபரப்பு – நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை.
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கொடிமரம் முன்பாக இருந்த அனுமன் சிலையை நகற்றியதை கண்டித்தும், மீண்டும் அச்சிலையை பழைய நிலைக்கு நகர்த்த கோரியும், திருமால் அடியார்கள் குழாம் சார்பில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உள்ளே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி திருமால் அடியார்கள் குழாம் அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்திவருகிறார்கள்.
ஸ்ரீரங்கம் கோவில் கொடிமரம் முன்பாக 3ஆயிரம் ஆண்டுகாலமாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலையை, கோவில் நிர்வாகத்தினர் நகற்றி வைத்துள்ளனர். அதனை பழைய நிலைக்கு நகர்த்த வேண்டுமென்று கூறி, திருமால் அடியார்கள் குழாம் அமைப்பினர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன்பாக கூடினார்கள்.
இப்போராட்டத்தில் திருமால் அடியார்கள் குழாமை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்கள் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருதுநகர் , திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்தனர்.
இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில்…
அனுமன் சிலையை சுற்றி வந்து வழிபடுவதற்கு ஏதுவாக அச்சிலை நகர்த்தி நிறுவப்பட்டுள்ளது என்ற கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த விளக்கத்தை போராட்டக்காரர்கள் தொடர்ந்து ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.