திருச்சி பாராளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோ வேட்புமனு தாக்கல்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான பிரதீப் குமாரிடம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
உடன் திமுக மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மதிவாணன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக. செயலாளர் கே.கே.செல்லப் பாண்டியன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் உள்ளனர்.