தேனி மாவட்டம் பங்களா மேடுவில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மற்றும் தேனி அனைத்து வேளாளர் உறவுமுறை சங்கம் சார்பாக தேசியத் தலைவரை இழிவுபடுத்தி விதமாக பேசிய திமுக MP ஆண்டிமுத்து ராசாவே கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிமுத்து ராசா உருவப் படத்தை எரித்ததால் காவல்துறைக்கும் போராட்டக் குழுவினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. திமுகவினர் மன்னிப்பு கேட்காமல் வெள்ளாளர் சமுதாயம் மக்கள் வாழும் இடத்திற்கு உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்றும் கண்டுக்காமல் இருக்கின்ற திமுக தலைமையை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் வருகின்ற தேர்தலில் ஒட்டுமொத்த வெள்ளாளர் இனமும் திமுகவை புறக்கணிப்போம் என்றும் ஆர்ப்பாட்டம நடந்தது.
மேலும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெள்ளாளர் ஓட்டுக்காக தேசியத் தலைவர் ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் ஒரே சிலையை திறந்து வைத்தார் அவரை இழிவுபடுத்தி பேசிய ஆண்டிமுத்து ராசாவை கண்டிக்க வேண்டுகிறோம் என்பதையும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா கூறினார்.
தேனி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய வேளாளர் சமுதாயத்தினருக்கு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்றும் அண்ணா திமுக விற்கும் பாரதிய ஜனதாவிற்கும் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.