திருச்சியில் 24-ந் தேதி எடப்பாடி பிரச்சாரம். பொதுக்கூட்ட இடத்தை மாவட்ட செயலாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் ஜூன் மாதம் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 24-ம் தேதி திருச்சியில் தொடங்குகிறார்.
24-ம் தேதி துவங்கி இருந்து 30-ம் தேதி வரை திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், நாமநாதபுரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரபரப்பை மேற்கொள்கிறார்.
முதன்முதலாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, வருகிற 24 -ந் தேதி, திருச்சி வண்ணாங் கோயில் பகுதியில், நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் தற்போது சுத்தம் செய்யும் பணி, மேடை அமைக்கும் பணி உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெற்று வரும் பணிகளை திருச்சி மாவட்ட செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்சோதி, ஜெ.சீனிவாசன் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.