Election Updates: அதிமுக கூட்டணியில் பாஜக-வுக்கு 20 இடங்கள்; இடைத்தேர்தலில் ஆதரவு!’ – கையெழுத்தானது தொகுதி உடன்படிக்கை!

Filed under: அரசியல் |

Election Updates: அதிமுக கூட்டணியில் பாஜக-வுக்கு 20 இடங்கள்; இடைத்தேர்தலில் ஆதரவு!’ – கையெழுத்தானது தொகுதி உடன்படிக்கை!

அ.தி.மு.க, பா.ஜ.க – ஒப்பந்தம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டது முதல் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் பிரதான கட்சிகளை பொறுத்தவரை கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தாலும், தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பா.ஜ.க இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தாகி உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.


அ.தி.மு.க – பா.ஜ.க உடன்படிக்கை

அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தமிழ்நாட்டில் 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இடைத்தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளருக்கு அ.தி.மு.க தனது முழு ஆதரவை அளிக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க சார்பில் தேசிய பொதுச் செயலாளர் சி.டி ரவியும், மாநில தலைவர் எல். முருகன் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.