இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழ்ந்த டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யாவை வணங்குகிறேன் – முதல்வர் ட்வீட்!

Filed under: தமிழகம் |

இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழ்ந்தவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யாவை வணங்குகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று நம் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும் மற்றும் விஞ்ஞானியும் மற்றும் ஏவுகணை நாயகனான பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 89 வது பிறந்த நாள் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்த நாளை உலகம் மாணவர்கள் நாளாக ஐநா சபை அறிவித்துள்ளது.

இவருடைய பிறந்தநாளுக்கு அணைத்து தலைவர்களும் மரியாதையை செய்து வருகிறார்கள்.

Image

தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யாவுக்கு மரியாதையை செய்து உள்ளார்.

இதை பற்றி அவரின் ட்விட்டரில்; “கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்” என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழும் காலத்தால் அழியாத டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்களின் 89வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன்.