திருச்சியில் இன்று போராட்டம்: சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

Filed under: தமிழகம் |

திருச்சியில் இன்று போராட்டம்: சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டலால்பரபரப்பு.

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது நான்கு விவசாயிகள் அருகில் இருந்த செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்கவேண்டும்
கரும்புக்கு உரிய விலை வழங்கிட வேண்டும். இந்தியாவில் உள்ள 90 கோடி விவசாயிகளை அழிக்காமல் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவணம் கட்டிக்கொண்டு மண்டை ஓடுகளுடன் அரை நிர்வாணத்துடன் தேசியதென்னிந்திய நதிகள் இணைப்பு
இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி தலைமை தபால் அலுவலகம் அருகே சிக்னலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் கோவணத்தை கட்டிக்கொண்டு மண்டை ஓடுகளுடன் சாடையில் கற்றுக் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் – திடீரென 4 விவசாயிகள் அருகில் இருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாரின் சமாதான பேச்சு வார்த்தைக்கு பின்னர் விவசாயிகள் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கினர்.இந்தப் போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்ததால் தலைமை தபால் நிலையம் பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.இந்தப் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.