பணி நிறைவு பெற்ற காவலர்களுக்கு பாராட்டு விழா.
மதுரை மாநகர காவல்துறையில் பணியாற்றி ஜூன் மாதம் பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஓய்வு பெறும் மதுரை மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சேவையை பாராட்டி, மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் அவர்கள், அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.