தமிழகத்தில் தங்கம் விலையானது இரண்டு நாட்களுக்கு பின் குறைந்துள்ளது. இன்றைய நிலவரம் குறித்து பார்க்கலாம்.
தமிழகத்தில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த வாரம் இதன் விலை சற்று குறைந்த நிலையில் இந்த வாரம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. ஆனால், இன்று (பிப்.3) தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ. 5870க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் ரூ. 46960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 காரட் சுத்தமான தங்கம் ரூ. 6340க்கும், ஒரு சவரன் ரூ. 50720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை போல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.77க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 77000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் நிம்மதியில் இருக்கின்றனர்.