ஜியோவில் ரூபாய்.33,737 கோடி முதலீடு செய்யும் கூகுள் – முகேஷ் அம்பானி தகவல்!

Filed under: இந்தியா |

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 7.7% பங்குகளை வாங்குவதற்கு கூகுள் நிறுவனம் முடிவ எடுத்துள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ரிலையன்ஸின் ஜியோவில் கூகுள் நிறுவனம் ரூபாய். 33,737 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

ஜியோவில் கூகுள் முதலீடு செய்வதை நாங்கள் வரவேற்கிறோம் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

மேலும், இதற்கு முன்பு பேஸ்புக் நிறுவனம் ஏப்ரல் மாதம் ரூபாய் 43,574 கோடி ஜியோவில் முதலீடு செய்து 9.99% பங்குகளை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.