ஒரு விபத்தில் காயமடைந்த தன் அப்பாவை 1200 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் அமரவைத்து சொந்த ஊருக்கு அழைத்து சென்ற பீகார் 15வயது சிறுமி ஜோதி குமாரிக்கு ஐஐடி-ஜீ தேர்வுக்கான இலவச பயிற்சி கொடுப்பதற்கு பயிற்சி நிறுவனம் சூப்பர் 30 முன்வந்தது.
டெல்லியில் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்த மோகன் பஸ்வான் என்பவர் ஒரு விபத்தில் காயமடைந்தார். இவர் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணத்தால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிர்த்திருந்தார்.
இவருடைய மகள் ஜோதி குமாரி 1200 கிலோமீட்டர் தூரம் ஏழுநாட்கள் சைக்கிளில் தன் அப்பாவை அமரவைத்து பீகாருக்கு கொண்டு சென்றார். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பரவி பரவி பலரும் பாராட்டை தெரிவித்தனர்.
பீகார் மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சி சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. பின்னர் டெல்லியில் உள்ள இந்திய சைக்கிள் பெடரேஷனும் சிறுமிக்கு பயிற்சி கொடுக்க முன்வந்துள்ளது.
மேலும், அமெரிக்கா அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்பும் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.