கொரோனா வைரஸ் முடிந்த பிறகு இந்தியா முன்னேற்றத்துடன் இருக்கும் – உள்துறை அமைச்சர் அமித்ஷா!

Filed under: இந்தியா |

இந்தியா உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நியூஸ்18 குழு தலைமை செய்தி தொடர்பாளர்ருக்கு நேற்று கொடுத்த பேட்டியில் அவர் கூறியது: கொரோனா வைரஸை தடுப்பதற்கு இந்தியா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் முடிந்த பிறகு இந்தியாவின் நிலை உலக அளவில் முன்னேறி இருக்கும் என கூறியுள்ளார்.

தப்ளீக் ஜமாத் பற்றி கேள்வி கேட்ட போது: முதலில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதே அரசின் வேலை மற்றும் சட்டத்தை மீறுபவர்கள் மீது அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளார்.
.