இந்தியாவின் பொருளாதாரம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால் இதனை சீராக்க ரூபாய்.20 லட்சத்திற்கான புதிய திட்டத்தை பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிட்டு பேசிவருகிறார்.
இந்த திட்டதை பல்வேறு தரப்பினரோடு கலந்து ஆலோசித்து தான் இந்த பொருளாதார தொகுப்பை உருவாகியுள்ளது. மேலும் திட்டத்தின் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டமைக்க அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் வளச்சியை உண்டாகும் வகையில் “சுயசார்பு பாரதம்” என்ற பெயரில் தொலை நோக்கு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். ஜன்தன், ஆதார் மூலம், பயனாளிகளுக்கு நிவாரணம் நேரடியாக செல்வதன் மூலம் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பிபிஇ கிட்டுகள், வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் உற்பத்தியின் வேகம் அதிகரித்துள்ளது. இதில் பொருளாதார கட்டமைப்பு, தொழில்நுட்பம் போன்ற 5 தூண்களை உருவாக்குவோம்.