இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்.
தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி சமவேலைக்கு சம ஊதியம் என்ற அரசாணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.