ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் மூலம் “புண்ணிய தீர்த்த யாத்திரை” ஏற்பாடு

Filed under: தமிழகம் |

ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் மூலம் “புண்ணிய தீர்த்த யாத்திரை” ஏற்பாடு

இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி யானது சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 11 ஸ்லீப்பர் கோச்சுகள், 01 பேண்ட்ரி கார், 02 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன.

பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் IRCTC, தென் மண்டலம் சார்பில், திருநெல்வேலியில் இருந்து “புண்ணிய தீர்த்த யாத்திரை” என்ற பெயரில் சுற்றுப் பயணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த சுற்றுலா ரயில் திருநெல்வேலியில் இருந்து தொடங்கி கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னைவ ழியாக காசி, திரிவேணி சங்கமம் (பிரயாக்ராஜ்), கயா மற்றும் அயோத்யா ஆகிய புன்னியஸ் தலங்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுப் பயணம் தொடங்கும் தேதி: 06.06.2024

நாட்கள்: 08 இரவுகள் /09 நாட்கள்

Economy (Sleeper class): Rs.18, 550/-

பிரத்யேக பாரத் கெளரல் சுற்றுலா ரயிலின் முக்கிய அம்சங்கள்:

1. SL வகுப்பில் ரயில் பயணம்

2. Non AC தங்குமிடம்

3. உள்ளூர் பார்வையிடுவதற்கான போக்குவரத்து

4 தென்னிந்திய சைவ உணவு

5. சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதி 6.பயணக்காப்புறுதி

மத்திய, மாநில மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த சுற்றுலா ரயிலில் பயணித்தால், LTC சான்றிதழ்களை பெறலாம்.

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்

8287932122/8287932070

இணைய தள முகவரி:

www.irctctourism.com