திருச்சி கிராமத்தில் செயல்படும் கல்குவாரியில் விதிமீறல்கள் நடைபெற்றது உண்மையா? என ஆய்வு செய்ய உத்தரவு!!
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கிராமத்தில் செயல்படும் கல்குவாரியில் விதிமீறல்கள் நடைபெற்றது உண்மையா? என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கல் குவாரியில் ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த செண்பகவல்லி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற கிளை இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.