பருவநிலை மாற்றத்தால் 50% குறைந்த மல்லிகை மகசூல்.
மல்லிகை சாகுபடி, ஏப்ரல், மே மாதங்களில் ஏக்கருக்கு 20 கிலோ வரை அறுவடை செய்ய முடியும், ஆனால், மே மாதத்தின் நடுப்பகுதியில் பெய்த பருவ மழை காரணமாக 50 சதவீதம் அறுவடை குறைந்து ஏக்கருக்கு 10 கிலோ மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. மேலும் இந்த மழை மொட்டுக்களை பாதித்துள்ளதுடன், ஈரப்பதம் அதிகரிப்பால் பூச்சி தாக்குதலுக்கும் வழிவகுக்கும் என்று மல்லிகை பயிரிடும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.