ஜெயலலிதா பிறந்தநாளை அன்னதானம்- நலத்திட்ட உதவிகள் மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி வழங்கினார்.

Filed under: தமிழகம் |

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஜெயலலிதா பிறந்தநாளை அன்னதானம்- நலத்திட்ட உதவிகள் மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி வழங்கினார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்பட்டது. திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே அவரின் உருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு சோமரசம்பேட்டை,
காலை 9.30 மணிக்கு கோப்பு,
காலை 10 மணிக்கு ஜீயபுரம்,
காலை 10.15 மணிக்கு பெட்டவாய்த்தலை (சிறுகமணி)
காலை 11 மணிக்கு முசிறி,
காலை 11.30 மணிக்கு துறையூர்,
காலை 12 மணிக்கு மண்ணச்சநல்லூர் ஆகிய இடங்களில் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி கலந்து கொண்டு அன்னதானம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொன் செல்வராஜ் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், இலக்கிய பிரிவு செயலாளர் ஜெயம் ஸ்ரீதர் மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் தேவா என்கிற தேவராஜகுமார், ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக்,ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார்,கோப்பு நடராஜ் ,பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன்,பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார்,ஏ.ஜி அருண், வக்கீல் தர்மேந்திரன், நவநீதன், ரங்கன் மகாமுனி, , வி.என்.ஆர்.செல்வம் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.