பெண்களின் நீதி என்ற தலைப்பில் மகளிர் காங்கிரஸ் மாநாடு.

Filed under: தமிழகம் |

திருச்சி அருணாசலம் மன்றத்தில் பெண்களின் நீதி என்ற தலைப்பில் மகளிர் காங்கிரஸ் மாநாடு.

மாவட்டத் தலைவர்கள் பங்கேற்பு.

திருச்சி மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் அருணாச்சலம் மன்றத்தில் பெண்களின் நீதி என்ற தலைப்பில் மகளிர் காங்கிரஸ் மாநாடு நடந்தது.

திருச்சிமாநகர் மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி தலைவி ஷீலா செலஸ் , தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி கமலா கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். பெண்களுக்கு நீதி வேண்டும் என்ற தலைப்பில் மகளிர் காங்கிரஸ் சார்பில் இந்தியா முழுவதும் இந்த மாநாடு நடைபெற்றது. இதேபோல் திருச்சியில் அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில பொதுச் செயலாளர் குமார், மகளிர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஸ்ரீவித்யா ரமேஷ்,கவுன்சிலர் சோபியா விமலா ராணி, மகளிர் காங்கிரஸ் மாநில செயலாளர் பெமிலா விஜயகுமார், மாநில பொதுச் செயலாளர் வக்கீல் மோகனாம்பாள், மாநில இணைச்செயலாளர் சரோஜா, மாவட்ட துணை தலைவிகள் கோகிலா, ஜெனிபர், செயலாளர்கள் விஜயலட்சுமி, ராதா, பஞ்சப்பூர் கோட்டத் தலைவர் மணிவேல்,தில்லை நகர் கோட்டத் தலைவர் உறையூர் கிருஷ்ணா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.