மலைவாழ் மக்களுடன் சந்திப்பு: கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பிரசாரபயணம்.

Filed under: தமிழகம் |

மலைவாழ் மக்களுடன் சந்திப்பு: கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பிரசாரபயணம்.

பிளாஸ்டிக்கை ஒழிப்பதே லட்சியம் என உறுதிமொழி.

கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 50 பேர் ஊட்டி மலை வாழ் மக்கள், நகர்ப்புற மக்கள் ஆகியோரை சந்தித்து மக்களின் மத்தியில் பிளாஸ்டிக் பையை அறவே ஒழித்து வரும் காலங்களில் அனைவரும் மஞ்சள் நிற பையை பயன்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு ஐந்து நாள்கள் பிரச்சார விழிப்புணர்வுக்காக திருச்சி மத்திய இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டனர். மாணவ மாணவிகள் அனைவருக்கும் தேவையான உணவுகள், உபகரணங்கள் வழங்கப்பட்டது.

அப்போதுபேராசிரியர் சர்மிளா தேவி,திருச்சி தமிழ் குரல் அமைப்பின் நிறுவனத் தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள் அனைவரும் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என உறுதிமொழி எடுத்தனர்.
இந்நிகழ்வில்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கணேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமூக சேவை பிரிவின் உதவி பேராசிரியர் சர்மிளா தேவி , திருச்சி தமிழ் குறள் அமைப்பின் நிறுவனத் தலைவர் வீ.புருஷோத்தமன்
செயலாளர்விக்னேஷ் பொருளாளர் கவிதாமற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.