குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. சிறப்பு புலனாய்வு குழு விசாரணை.

Filed under: உலகம் |

குவைத் மங்காப் பகுதியில் நேற்று அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் 42 பேர் இந்தியர்கள் ( கேரளா 25 பேர்) மற்றவர்கள்   பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

குவைத்தின் மங்காப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. அஹ்மதி மற்றும் முபாரக் அல் கபீர் கவர்னரேட்டுகளில் உள்ள அரசு வழக்குத் துறையின் மூத்த அதிகாரிகளின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடம் மற்றும் காயமடைந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சிறப்பு புலனாய்வு குழு ஆதாரங்களை சேகரிக்கும்.

நேற்று காலை மங்காபிலில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் வசிக்கும் ஆறு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இதுவரை 42 இந்தியர் உட்பட (25 மலையாளிகள்) 50 க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த உள்துறை அமைச்சர் ஷேக் ஃபஹத் அல் யூசுப் அல் சபா, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முன்னதாக உத்தரவு பிறப்பித்தார்.