கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம்.

Filed under: தமிழகம் |

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம்.

மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் சார்பில் தமிழ்நாட்டின் 35 மாவட்டங்களில் “கலைச் சங்கமம்” நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் கலைச்சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையேற்று தொடங்கி வைத்தார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசியுடன், இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன் வழிகாட்டுதலுடன், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்களின் நல வாரியத்தின் நிர்வாக குழு உறுப்பினர், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர் பண்ணை எம்பி சிங்காரவேலன் ஒருங்கிணைப்பில், தப்பட்டம், ஒயிலாட்டம் மற்றும் கரகம், காளி, பொய்க்கால் குதிரை ஆட்டம், வள்ளி திருமணம் இசை நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.