நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் வெட்டி கொலை.
திருநெல்வேலி மாவட்டம் கே டி சி நகர் புறவழிச் சாலை பாலம் அருகில் வைர மாளிகை உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் முன்பு மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜன் உணவகத்தில் சாப்பிட வந்துள்ளார். அங்கு வந்து அவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.
இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட தீபக் ராஜன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.