ஊர் பெயரை மாற்றியதை கண்டித்து மக்கள் போராட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆத்திக்காட்டு விளை ஊரின் பெயரை சீயோன்புரம் என்று மாற்றி உள்ளதை கண்டித்து இன்று அப்பகுதி ஊர்மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்து மகா சபா மாநிலத் தலைவர் தா. பாலசுப்பிரமணியம் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு-பெயர் மாற்றத்தை உடனடியாக நீக்க வேண்டும் இல்லையென்றால் போராட்டம் தொடரும் என அறிவிப்பு.