பெரம்பலூர் தொகுதி
திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரசாரம்.
திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பு.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேரு ஆகியோர் தங்களது குலதெய்வ கோயில் புத்தனாம்பட்டியில் உள்ள ஸ்ரீ மாவடி கருப்பண்ண சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்து தனது முதல் கட்ட பிரச்சார பயணத்தைதொடங்கினர்.
துறையூர் தொகுதி போட்டாத்தூரில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் . புத்தனாம்பட்டி அபினிமங்கலம், துறையூர் ஒன்றியத்தில் உள்ள பகளவாடி,காளிப்பட்டி சிங்களாந்தபுரம் கண்ணனூர் மதுராபுரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் திமுக அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்தார்.
துறையூர் நகரம் பாலக்கரையில் அமைச்சர் கே என் நேரு பேசும்போது, துறையூர் நகரை விரிவுபடுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். தற்பொழுது புறவழிச் சாலை குடிநீர் வசதி திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மலைவாழ் மக்களுக்கு எடை மெஷின் அமைத்து தர கூறினார்கள் உடனடியாக திமுக அரசு செய்து தரப்பட்டுள்ளது இதுபோல் பல திட்டங்கள் நிறைவேற திமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.