இன்று இந்தியா முழுவதும் சிறப்பாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவும் டெல்லியில் இருக்கும் ஜூம்மா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். மசூதிக்கு நுழையும் முன்பே காய்ச்சல் இருக்கிறதா என்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், சமூக இடைவெளியை பின்பற்றி தொழுகை நடத்தி இருக்கின்றனர்.
தமிழக்தில் கொரோனா காரணமாக மசூதிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் வீட்டில் இருந்தபடியே தொழுகையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பக்ரீத் பண்டிகைக்கு இஸ்லாமிய சகோதரர்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
அவருடைய ட்விட்டரில் பதிவில்: பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள். ஒரு நியாயமான இணக்கமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க இந்த நாள் நம்மை ஊக்குவிக்கும் சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் ஆவி வளர்க்கப்படட்டும். ஈத் முபாரக் என பதிவிட்டுள்ளார்.