பத்திர பதிவினை தடை செய்வதை இரத்து செய்யக்கோரிஇந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு பரிந்துரை கடிதம்.

Filed under: தமிழகம் |

திருவானைக்காவல் அடிமனை பிரச்சனை: பத்திர பதிவினை தடை செய்வதை இரத்து செய்யக்கோரிஇந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு பரிந்துரை கடிதம்.

பேச்சுவார்த்தையில் சமூக உடன்பாடு.

திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருவானைக்கோவில் பர்மாகாலனியை சேர்ந்த மாரி(எ)பத்மநாபன் திருவானைக்கோவில்ஜெம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோவில் செயல் அலுவலர்/உதவி ஆணையர் கடிதத்தின் படி ஶ்ரீரங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சில புலஎண்கள் மீது பத்திர பதிவு மோற்கெள்ள வேண்டாம் என கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,இதனால் திருவானைக்காயில் பகுதியில் உள்ள சுமார் 4000ஆயிரத்திற்கு மேல் வாழும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு அளிக்கப்பட்டது.

இந்தமனு சம்பந்தமாக ஶ்ரீரங்கம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையின் கீழ் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது.
கூட்டத்தில் சார்பதிவாளர்,வருவாய் வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர்,கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊர் பொதுமக்கள் எம்.மாரி(எ)பத்மநாபன் தலைமையில்
கலைமணி, விஸ்வலிங்கம், சந்திரசேகரன், குருசுப்பிரமணியன், அனநதராமன் தீட்சதர், சண்முகம்பிள்ளை, வழக்கறிஞர் .பாலுமகேந்திரன், ஞானமூர்த்தி ,ஐயப்பன், நாகராஜன், கண்ணன், உதயகுமார்,மோகன் கார்த்தி மற்றும் ஊர்முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஶ்ரீரங்கம் வட்டம் வெள்ளிதிருமுத்தம் கிராமத்தை சேர்ந்த சில புலஎண்கள் 1898−ம் ஆண்டு ரீசெட்டில்மெண்ட் பைசலாபதி பதிவேட்டின்படி அ/மி.ஜெம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலுக்கு சொந்தமானது என்றும், தற்போது பத்திர பதிவு மோற்கொள்ள தடை செய்யப்பட்டுள்ளது தவறு என்றும் ஒரு முக்கியஸ்தர்கள் எடுத்துக் கூறினர்.
இனாம் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகு மேற்படி நிலங்கள் தனி நபர் பெயரில் பட்டா வழங்கப்பட்டு,தற்போது வருவாய்துறை கணக்குகளில் பட்டாதாரா்(தனி நபர்) பெயரில் பதிவு செய்து பாராமரிக்கப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து பத்திர பதிவு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். என கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் பத்திரபதிவை நிறுத்தம் செய்ததை இரத்து செய்யக்கோரி ஆணையர் மற்றும் உதவி ஆணையர்,இந்துசமய அறநிலையத்துறை ஆகியோருக்கு 05−02−2024 அன்று அளித்த மனுக்கள் தொடர்பாக திருச்சிமாவட்ட ஆட்சித் தலைவர் பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிக்கும் பொருட்டு ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து திருவரங்கம் சார் பதிவாளர் பேசுகையில்,
இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் பத்திர பதிவினை தடைகோரி அனுப்பப்பட்ட கடிதத்தினை ஏற்று பத்திரப்பதிவு சட்டம் பிரிவு22(a)−ன்படி தற்போது பத்திரபதிவு மேற்கொள்ளாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கூட்டத்தில்
மனுதாரா் தரப்பில் பத்திர பதிவினை தடை செய்வதை இரத்து செய்யக்கோரி கடந்த 05−02−2024 அன்று அளிக்கப்பட்ட மனு தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு உரிய மேல் நடவடிக்கைக்காக அனுப்ப கோரியதின் பேரில் பரிந்துரை செய்யபடும் என்று திருவரங்கம் ஆர்.டி.ஓ. தெரிவித்தார்.