திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட  ரூ. 4.42 லட்சம் தங்கம் பறிமுதல்.

Filed under: தமிழகம் |

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட  ரூ. 4.42 லட்சம் தங்கம் பறிமுதல்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இலங்கை வழியாக ஏர்லங்கா விமானம்  திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இதில் ஆண் பயணியொருவர் தனது ஆடையில் வடிவமைக்கப்பட்ட பிரத்யேகஅறையில், 70 கிராம் பசைவடிவிலான தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 4.42 லட்சமாகும். அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.