சிவகங்கை மாவட்டம் சிவகங்கை காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள பருந்து பார்வை அலுவலகத்தில் “இல்லம்தோறும் ஸ்டாலின்” எனும் திண்ணைப் பிரச்சாரம் முன்னெடுப்பிற்கு நகர் கழக செயல்வீரர் கூட்டம் சிவகங்கை நகர் கழக செயலாளர் மற்றும் நகர் மன்ற தலைவர் *சிஎம்.துரைஆனந்த்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 71வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கபட்டது. மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுகூட்டத்தினை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை நடத்தபட்டது. மற்றும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என தீர்மானம் நிறைவேற்றபட்டது.
மேலும் வருகின்ற தேர்தலில் நகர் பகுதிகளில் அதிக வாக்கு எண்ணிக்கை பெறும் பூத் பொருப்பாளருக்கு மற்றும் பாக முகவருக்கு 1/2பவுன் மோதிரம் பரிசாக வழங்கபடும் என நகர் கழக நிர்வாகிகளுக்கு உற்சாகபடுத்தி ஊக்கமளித்தார்.
அதனை தொடர்ந்து கழக தலைமையால் அறிவிக்கபட்ட சிவகங்கை நகருக்கான பாக பொறுப்பாளர்கள் ஜெயகாந்தன்,இராஜஅமுதன்,விஜயகுமார்,சதிஸ்குமார் ஆகியோரை நகர் மன்ற தலைவர் சிஎம்.துரைஆனந்த் அவர்கள் கழக பொறுப்பாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் நகர் மன்ற து.தலைவர் கார்கண்ணன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள்,உள்ளாட்சி நிர்வாகிகள்,வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள்,அணி நிர்வாகிகள், நகர் கழக பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொன்டு சிறப்பித்தனர்…