மத்திய அரசு நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதிய உயர்வை அறிவித்திருப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது என்று தென்காசி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சி தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. செய்தியாளரிடம் பேசிய தென்காசி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி, “மத்திய அரசு நூறு நாள் வேலை திட்டத்திற்கான ஊதிய உயர்வை அறிவித்திருப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது. ஊதிய உயர்வுக்கான அரசாணையை முன்னதாகவே போடப்பட்டிருப்பதால் இந்த […]