நடிகை அனுஷ்கா தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த “அருந்ததி,” “ருத்ரமாதேவி” போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. அனுஷ்கா கடைசியாக “பாகுபலி” திரைப்படத்தில் நடித்த பின்னர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. மேலும் அவரின் உடல் எடையும் ஏறி குண்டாக காணப்பட்டார். அதனால் அவர் சினிமாவை விட்டு விலகி எடைகுறைப்பில் ஈடுபட்டார். கடைசியாக அவர் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார். […]