சூர்யாவை திருமணம் செய்துகொண்ட நடிகை ஜோதிகா, பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகியிருந்தார். பின்னர் “36 வயதினிலே” படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்தவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக “காதல்” திரைப்படத்தில் நடித்தார். அப்படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது. பாலிவுட்டில் “ஷைத்தான்” படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோரோடு இணைந்து நடித்தார். இப்படத்தை சூப்பர் 30 படத்தை இயக்கிய விகாஸ் பால் இயக்கினார். […]