Home » Posts tagged with » america (Page 4)

ஜப்பான் மற்றும் அமெரிக்கா பிரதமர்கள் சந்திப்பு!

Comments Off on ஜப்பான் மற்றும் அமெரிக்கா பிரதமர்கள் சந்திப்பு!

ஜனவரி 13ம் தேதி ஜப்பான் பிரதமர் புமியோவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல ஆண்டுகளாக ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடு நட்புமுறையில் இருந்து வருகிறது. அவ்வகையில் ஜப்பான் நாட்டின் மீதான நட்பை மேலும் வலியுறுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஜப்பான் நாட்டிற்கு தென்கொரியா அச்சத்தை கொடுத்து வரும் நிலையில் கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்த பேச்சுவார்த்தை […]

Continue reading …

உறைந்தது நயகரா நீர்வீழ்ச்சி!

Comments Off on உறைந்தது நயகரா நீர்வீழ்ச்சி!
உறைந்தது நயகரா நீர்வீழ்ச்சி!

உலகம் முழுவதும் உள்ள மக்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது அமெரிக்காவில் மக்கள் பனியில் சிக்கி தவித்து வருகின்றனர். வரலாறு காணாத கடும் பனிபொழிவால் அமெரிக்க மாகாணங்கள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டே வெளியேற முடியாத சூழல் நிலவுவதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன. பல மாகாணங்களில் விமான சேவைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைகள் பனிமூடி கிடப்பதால் வாகனங்கள் மூலமாகவும் பயணிக்க முடியாமல் மக்கள் சிக்கியுள்ளனர். சில பகுதிகளில் கடும் பனியால் […]

Continue reading …

டிரைவரே இல்லாத டாக்சியா?!

Comments Off on டிரைவரே இல்லாத டாக்சியா?!

டிரைவர் இல்லாத டாக்ஸியை ஊபர் நிறுவனம் அமெரிக்காவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. ஓட்டுனரின்றி தானாகவே இயங்கும் டாக்சிகளை முதல் முறையாக அமெரிக்காவிலுள்ள லாஸ்வேகாஸ் பகுதியில் ஊபர் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மோஷனல் என்ற தொழில்நுட்ப நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஊபர் நிறுவனம் இந்த டாக்ஸியை வடிவமைத்துள்ளது. இந்த டாக்ஸியை 2023ம் ஆண்டு மக்கள் பயன் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்காக அவர்களது நடவடிக்கை பதிவு செய்யப்படும் என்றும் இது முழுக்க முழுக்க பாதுகாப்பான […]

Continue reading …

பேஸ்புக் அமெரிக்க அரசுக்கு நிறுவனம்!

Comments Off on பேஸ்புக் அமெரிக்க அரசுக்கு நிறுவனம்!

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் அமெரிக்காவில் பத்திரிக்கை மசோதா விரைவில் நிறைவேற்றப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில் பத்திரிகை மசோதாவை நிறைவேற்றினால் பேஸ்புக்கில் செய்திகள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பத்திரிகை மசோதா சட்டம் நிறைவேறியது. அதன் பின் அந்நாட்டிடம் பேஸ்புக் ஒப்பந்தம் செய்து கொண்டு தனது முடிவை மாற்றியது. இந்நிலையில் அமெரிக்காவில் பத்திரிகை மசோதா நிறைவேற்றப்பட்டால் சமூக ஊடகங்கள் அமெரிக்காவின் உள்ளூர் செய்திகள் ஆக மாறும் என்றும் […]

Continue reading …

கோவிட்-19 குறித்து அமெரிக்க ஆய்வாளர் பகீர் தகவல்!

Comments Off on கோவிட்-19 குறித்து அமெரிக்க ஆய்வாளர் பகீர் தகவல்!

வூஹான் மாகாண ஆய்வுகூடத்தில் பணியாற்றிய நபர் தன் புத்தகத்தில் கோவிட் -19 எனும் கொரொனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்ற தகவலை தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு சீன தேசத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுக்கும் கொரோனா தொற்றுப் பரவியது. இதனால், உலகம் முழுவதிலும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணகான மக்கள் உயிரிழந்தனர். கொரொனாவின் உருமாறிய வைரஸ் மேலும் பல நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இதன் 5ம் அலை விரைவில் பரவலாம் என […]

Continue reading …

அமெரிக்காவில் ஆச்சரிய சம்பவம்!

Comments Off on அமெரிக்காவில் ஆச்சரிய சம்பவம்!

அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர் கணவரின் ஒப்புதலுடன் தனது முன்னாள் காதலருடன் வீட்டில் வசிக்கும் ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 39 வயது பெண் சாரா என்பவர் ரோனி என்பவரை காதலித்தார். ஆனால் காதலருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டு பின்னர் ரியான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவருடன் சாரா சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென முன்னாள் காதலன் ரோனி, சாராவை தேடி வந்து தான் திருந்திவிட்டதாக […]

Continue reading …

விமானம் கார் ஷோரூம் மீது விழுந்து தீ விபத்து!

Comments Off on விமானம் கார் ஷோரூம் மீது விழுந்து தீ விபத்து!

இன்று சிறிய ரக விமானம் ஒன்று அமெரிக்க நாட்டிலுள்ள ஓகியோ மாகாணத்தில் இயங்கி வரும் பிரபல கார் விற்பனை மையம் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விமானம் வானில் பறந்து கொண்டிருக்கும்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மரியெட்டா என்ற நகரில் அமைந்துள்ள கார் விற்பனை மையத்தின் மீது விழுந்தது. இதில், அங்கிருந்த கார்கள் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில், விமானத்தில் பயணித்த விமானி உள்ளிட்ட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Continue reading …

எலான் மஸ்க்கிடம் விசாரணை!

Comments Off on எலான் மஸ்க்கிடம் விசாரணை!

அமெரிக்க அதிகாரிகள் டுவிட்டர் ஒப்பந்தத்திலிருந்து எலான் மஸ்க் விலகியதை குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டுவிட்டர் நிறுவனத்தை வாங்க கடந்த சில மாதங்களுக்கு முன் எலான் மஸ்க் முடிவு செய்தார். ஆனால் அதன் பின் டுவிட்டரில் போலி கணக்குகள் அதிகமாக இருப்பதால் அதை வாங்குவதில் இருந்து பின்வாங்கினார். எலான் மஸ்க்கிற்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவ்வகையில் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் […]

Continue reading …

அமெரிக்காவின் அறிவுரை!

Comments Off on அமெரிக்காவின் அறிவுரை!

அமெரிக்க அரசு பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான், கைபர் மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆள் கடத்தல் போன்ற குற்றங்கள் அதிகமாகி வருகிறது. வெளிநாட்டு பயணிகளை துப்பாக்கி முனையில் கடத்தப்படுவது அதிகரித்து உள்ளதால் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான், கைபர் ஆகிய மாகாணங்களுக்கு செல்ல வேண்டாம். அங்கு செல்ல வேண்டிய பயணம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் […]

Continue reading …

ஐயான் சூறாவளி! க்யூபாவையும் விட்டுவைக்கல!

Comments Off on ஐயான் சூறாவளி! க்யூபாவையும் விட்டுவைக்கல!

ஐயான் சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது. இந்நிலையில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரியா மாகாணத்தில் உள்ள கேயோ கோஸ்டா கடற்கடை அருகே ஐயான் சூறாவளி புயல் கரையை கடந்தது. அமெரிக்காவில் பாதிப்புகளை ஏற்படுத்திய மோசமான சூறாவளி புயல்களில் ஒன்றாக ஐயான் கூறப்படுகிறது. மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகமாக காற்று வீசியபடி கரை கடந்த ஐயான் சூறாவளி புயல் ஆர்லேண்டோ மற்றும் கேப் கேனவரேல் பகுதிக்கு இடையே மையம் கொண்டபோது காற்றின் […]

Continue reading …