Home » Posts tagged with » Annamalai (Page 5)

தமிழகம் வரும் பிரதமர் மோடி; தேதியில் மாற்றம்!

Comments Off on தமிழகம் வரும் பிரதமர் மோடி; தேதியில் மாற்றம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தேதி பற்றிய விவரங்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வருகிற 25-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பேச உள்ளதாக பா.ஜ.க. கட்சித் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இக்கூட்டத்துக்காக தமிழகம் முழுதும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்களை திரட்டவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பிரதமர் […]

Continue reading …

சென்னை முழுக்க மிகப்பெரிய போராட்டம்; அண்ணாமலை எச்சரிக்கை!

Comments Off on சென்னை முழுக்க மிகப்பெரிய போராட்டம்; அண்ணாமலை எச்சரிக்கை!

இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று திருச்சி செல்லப் போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரமாக காத்திருப்பதாகவும், கிளாம்பாக்கம் வரும் பேருந்துகளில் இருக்கைகளில் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் ஆத்திரமடைந்து பயணிகள் புகார் அளித்து, பேருந்துகளை சிறைப்பிடித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, “நேற்றைய தினம் இரவு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக, சென்னையின் பல பகுதிகளில் இருந்து […]

Continue reading …

அண்ணாமலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி!

Comments Off on அண்ணாமலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக தொலைக்காட்சி நடத்துவதே மக்களிடம் இருந்து உண்மைகளை மறைக்கத்தான்- என்று கூறியுள்ளார். மேலும் அவர் வரும் 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்த உடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஒரு ஒப்பீட்டுக்கு– தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம்… ஙியிறி கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 […]

Continue reading …

கிளாம்பாக்கம் செல்ல போக்குவரத்து கட்டணம் அதிகம்; அண்ணாமலை!

Comments Off on கிளாம்பாக்கம் செல்ல போக்குவரத்து கட்டணம் அதிகம்; அண்ணாமலை!

பாஜக தலைவர் அண்ணாமலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் போக்குவரத்துக்கான கட்டணம் அதிகம்- என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “கோயம்பேடு பேருந்து நிலையத்தை மையப்படுத்தி, மெட்ரோ ரயில் நிலையம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு இத்தனை ஆண்டுகளாகப் பல ஆயிரம் கோடி செலவு செய்துவிட்டு, பயணிகளுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்பட்டாத கிளாம்பாக்கத்திற்கு, பேருந்து நிலையத்தை உடனே மாற்றுவோம் எனும் அடிமுட்டாள்தனமான செயல்பாட்டை என்னவென்று சொல்வது? கோயம்பேடு சுற்றியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு […]

Continue reading …

டாஸ்மாக் மூடப்படும், கள்ளுக்கடைகள் திறக்கப்படும்: அண்ணாமலை!

Comments Off on டாஸ்மாக் மூடப்படும், கள்ளுக்கடைகள் திறக்கப்படும்: அண்ணாமலை!

அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதோடு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் என் மண் என் மக்கள் பாதை யாத்திரையின் போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசும்போது, “வள்ளலாரின் கொள்கையை கடைப்பிடித்து வரும் ஊரில் போலீசார் தடியடி நடத்தப்பட்டது ஏற்க முடியாதது. பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து டாஸ்மாக் கடையை மூடப்படும், அடுத்த கையெழுத்து கள்ளுக்கடைகள் திறக்கப்படும்” என்று கூறினார். […]

Continue reading …

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததே திமுகதான்; அண்ணாமலை!

Comments Off on ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததே திமுகதான்; அண்ணாமலை!

தமிழக பாஜக அண்ணாமலை “ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தமிழகத்தில் தடை விதித்ததே ஒட்டுண்ணி மாடல் திமுகதான்” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது: “பொய் சொல்வதை மட்டுமே முழு நேரப் பிழைப்பாகக் கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். கடந்த முறை ஆளுங்கட்சியாக இருக்கும்போது, யார் எதை நீட்டினாலும் கையெழுத்து போட்டுவிட்டு, டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க, தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன் என்று மன்னிப்பு கோரிய ஸ்டாலின் தற்போது, துண்டுச் சீட்டில் யார் எதை எழுதிக் கொடுத்தாலும் அப்படியே வாசித்து […]

Continue reading …

கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி..!

Comments Off on கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி..!

கனிமொழி எம்பி தனது சமூக வலைத்தளத்தில் அண்ணாமலை ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என அண்ணாமலையின் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார். கனிமொழியின் கண்டன பதிவுக்கு அண்ணாமலை, “ஆண்டாண்டு காலமாக, தரம் தாழ்ந்த மொழியில் மட்டுமே பேசிப் பழகிய திமுகவினருக்கு, எங்கள் பகுதியின் வழக்கு மொழி தவறாகத் […]

Continue reading …

அண்ணாமலையின் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!

Comments Off on அண்ணாமலையின் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!

சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை “நியூஸ் 18 தமிழ்நாடு” தொலைக்காட்சியில் நெறியாளர் கார்த்திகை செல்வன் நேர்காணல் நடத்தினார். பாஜக தலைவர் அண்ணாமலை இந்நிகழ்ச்சி தொடர்பாக நெறியாளர் கார்த்திகை செல்வனை பற்றியும் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பற்றியும் கடுமையாக விமர்சித்தார். இதற்கு ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். செய்தியாளரின் கேள்விகளை கொச்சைப்படுத்தியதாக அண்ணாமலைக்கு நேற்று WJUT கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து திமுக எம்பி கனிமொழி “அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை […]

Continue reading …

உதயநிதிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து அண்ணாமலை விளக்கம்!

Comments Off on உதயநிதிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து அண்ணாமலை விளக்கம்!

முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தார். இந்த பேட்டி குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் என்ன என்பதை பாஜகவினரை பார்த்து உதயநிதி தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், “அந்த பத்திரிகையாளர் சந்திப்பு 40 நிமிடம் நடந்ததாகவும் அதில் 38 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அனைத்து கேள்விகளும் நட்பு முறையில் கேட்கப்பட்ட கேள்வி. ஒரு கேள்வி கூட தமிழகத்தின் […]

Continue reading …

திமுக விசாரணைக்கு ஒத்துழைக்க அண்ணாமலை வேண்டுகோள்!

Comments Off on திமுக விசாரணைக்கு ஒத்துழைக்க அண்ணாமலை வேண்டுகோள்!

பல ஆண்டுகளாக திமுகவின் முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம், பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இக்குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டிய திமுகவோ, இதற்குப் பதில் கூறுவதைத் தவிர்த்து வருவது பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் முரசொலி நிலம் தொடர்பான வழக்கில் பட்டியலினத்தோர் ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் […]

Continue reading …