நடிகை குஷ்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிங்கம் என்றும், அவர் உண்மையைத்தான் பேசுவார் என்றும் பேசியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஒன்றில், “தி டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது, ஊழல்வாதி என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது வன்மத்தைக் கக்கியுள்ள அண்ணாமலையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவைத் தேடி போயஸ் கார்டனுக்கு மோடி, அருண்ஜெட்லி உள்ளிட்டோர் வரிசையாக காத்திருந்தனர். கடந்த 2014ம் […]
Continue reading …பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக முன்னாள் எம்பி பாஜகவில் இணைந்துள்ளது கட்சிக்கு மேலும் ஊக்கமளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார். இன்று அதிமுகவின் முன்னாள் எம்பியும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மைத்ரேயன் திடீரென பாஜகவில் இணைந்து கொண்டார். அவர் பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் இணைந்து கொண்டதையடுத்து அவரை பாஜகவின் முன்னணி தலைவர்கள் வரவேற்றனர். அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணைந்தது குறித்து அண்ணாமலை, “பிரதமர் நரேந்திரமோடி நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவர் கரத்தினை வலுப்படுத்த, பாஜகவின் […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவின் நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்திய விவகாரம் தனக்கு அதிர்ச்சியளித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியதாக செய்திகள் வெளியானதும், ஆரம்பம் முதல் அதனை மழுப்பி மறைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறார் தமிழக பால்வளத்துறை அமைச்சர். அரசு நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்தி, அதற்கான ஊதியத்தையும் வழங்காமல், போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அவல நிலைக்கு, தமிழக பால்வளத்துறை அமைச்சரே பொறுப்பு. பால்வளத்துறை அமைச்சர், சிறார்கள் ஆவின் அலுவலகத்தில் பணியமர்த்தப்படவில்லை […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை DMK files இரண்டாம் பாகம் வரும் ஜூலை மாதம் முதல் வாரம் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் DMK files முதல் பாகம் வெளியானதை தொடர்ந்து அண்ணாமலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து அண்ணாமலை மீது முதலமைச்சரின் குடும்பத்தினர் உள்பட திமுகவினர் வழக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பினர். இந்த சொத்து பட்டியல் வெளியான ஒரு சில நாட்களில் தான் ஜி ஸ்கொயர் மற்றும் […]
Continue reading …ஆ.ராசா, “கருணாநிதியால் தான் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி ஆனார். இல்லையென்றால் இன்னும் அவர் ஆடுதான் மேய்த்துக் கொண்டிருப்பார்” என்று அவர் பேசியுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். விழா ஒன்றில் பேசிய ஆ.ராசா, “கலைஞரின் பேனாவால் போடப்பட்ட கையெழுத்தால்தான் அண்ணாமலை ஐபிஎஸ் ஆனார்” என்று பேசினார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “என் பேனா, என் மை, என் பெற்றோர், நண்பர்கள் மற்றும் எனது ஆசிரியர்கள் அளித்த ஆதரவு. என்னைப்போல் பலர், அடுத்த கட்டத்திற்கு […]
Continue reading …கவர்னர் ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து விஷச்சாராயம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கிண்டி ராஜபவன் தமிழக ஆளுநர் ரவியை சந்தித்தார். சந்திப்பின்போது அவர் விஷ சாராயம் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த […]
Continue reading …பாஜக தமிழகத்தில் வரும் 20ம் தேதி கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பரிதாபமாக பலியாகினர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் வேட்டை தமிழகம் முழுதும் காவல்துறை நடத்தியது. நூற்றுக்கணக்கான நபர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கள்ளச்சாராயத்தை தடுக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக வரும் 22ம் தேதி பேரணி நடத்தி […]
Continue reading …தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவில் நிதியை எடுத்து, வாகனங்கள் வாங்குவது விதி மீறல் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகச் செலவுகளுக்காக, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, கோவில்கள் வருமானத்திலிருந்து, 12% ஒதுக்கப்படுகிறது. அதற்கு மேல், கோவில் நிதியை எடுத்து, வாகனங்கள் வாங்குவது என்பது விதி மீறலாகும். கோவில் நிதியை அறநிலையத் துறையின் இதர செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றமே […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையேல் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக எம்பி கனிமொழி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தரப்பிலிருந்தும் உதயநிதி மற்றும் டி.ஆர்.பாலு தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸ்க்கு பதிலளித்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க முடியாது […]
Continue reading …அண்ணாமலை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பணமூட்டையை ஹெலிகாப்டரில் எடுத்துச் சென்றதாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் குற்றம் சாட்டியிருக்கிறார். சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது சொத்து பட்டியலை வெளியிட்டு ஊழல் குற்றம் சாட்டினார். அது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை கர்நாடக மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்து வருகிறார். கர்நாடக தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஹெலிகாப்டரில் பணம் மூட்டைகளை அண்ணாமலை கொண்டு வந்தார் என காங்கிரஸ் […]
Continue reading …