திடீரென சென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து இருபத்தி இரண்டு மணி நேரம் தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை செய்து வந்தனர். அதன் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி சேனல் ஒன்றுக்கு தகவல் வந்தது. அச்செய்தி சேனல் தரப்பிலிருந்து காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறை சார்பில் வெடிகுண்டு நிபுணர்கள் தலைமைச் செயலகம் முழுவதும் சோதனை செய்தனர். […]